search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.எஸ் வசமிருந்த பல்லூஜா நகரின் தெற்கு பகுதியை கைப்பற்றியது ஈராக் படைகள்
    X

    ஐ.எஸ் வசமிருந்த பல்லூஜா நகரின் தெற்கு பகுதியை கைப்பற்றியது ஈராக் படைகள்

    ஐ.எஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பல்லூஜா நகரை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள அந்நாட்டு படையினர், நகரின் தெற்கு முனை பகுதியை கைப்பற்றியுள்ளனர்.
    பாக்தாத்:

    ஈராக் மற்றும் சிரியாவில் பல மனித உரிமை மீறல் செயற்பாடுகளை மேற்கொண்டுவரும் ஐ.எஸ் தீவிரவாதிகள், கடந்த வருடம் அங்குள்ள பெரும் பகுதிகளை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

    அந்த வகையில் ஈராக்கின் பெரிய நகரில் ஒன்றான மெசூலுக்கு அடுத்த படியாக, பல்லூஜா நகரை ஐ.எஸ் தீவிரவாதிகள் கைப்பற்றினர்.

    இந்நிலையில், ஐ.எஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பல்லூஜா நகரை அந்நாட்டு படையினர் மீட்கும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தரை வழியாகவும், வான் வழியாகவும் ஐ.எஸ் தளங்கள் மீது ஈராக் படையினர் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதற்காக அதிக அளவில் ஈராக் பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், ஐ.எஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பல்லூஜா நகரை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள அந்நாட்டு படையினர், நகரின் தெற்கு முனை பகுதியை கைப்பற்றியுள்ளனர்.

    கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வரும் சண்டையை மேற்பார்வையிடும் ஈராக் சிறப்பு படையினர் கமாண்டர் லெப்டினன் ஜெனரல் அப்தெல் வாகாப் அல்-சாதி இதனை தெரிவித்தார்.

    "அதிக அளவில் விவசாய விளைநிலங்கள் கொண்ட நாய்மியாஹ் அருகாமையில் உள்ள பகுதிகள் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையின் கட்டுப்பாட்டிற்கு வந்துள்ளது. சிறப்பு படை தற்போது நகரின் மையப் பகுதிக்குள் நுழைகிறது” என்றார்.

    ஐ.எஸ் அமைப்பானது ஈராக்கின் வடக்கு மற்றும் மேற்கில் பல்வேறு பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மொசூல் நகரினை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
    Next Story
    ×