Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 15 ஆகஸ்ட் 2026...

தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
Live News

டெல்லி ராஜ்காட்டில் உள்ள தேசத்தந்தை மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

நாட்டின் 80-வது சுதந்திர தினத்தையொட்டி தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி.

டெல்லியில் உள்ள செங்கோட்டைக்கு வந்தடைந்த பிரதமர் மோடியை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்றார்.

நாட்டின் சுதந்திர தினவிழாவை ஒட்டி டெல்லி கடமைப்பாதையில் பிரதமர் மோடிக்கு முப்படை, காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை

13-வது முறையாக தேசியக்கொடியை ஏற்றிவைத்து நாட்டு மக்களிடையே உரையாற்ற உள்ளார் பிரதமர் மோடி.

சுதந்திர தினவிழா கொண்டாட்ட வரலாற்றில் முதன்முறையாக டெல்லி செங்கோட்டையில் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டது.

டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி.

நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி செங்கோட்டையில் பிரதமர் மோடி ஏற்றி வைத்த தேசியக்கொடிக்கு 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.

செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.

நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வை இந்தியா கண்டு கொண்டிருக்கிறது.

நாட்டு மக்கள் அனைவரது இல்லங்களிலும் இன்று மூவர்ண கொடி பறந்து கொண்டிருக்கிறது.

வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டை அனைவரும் கொண்டாடி கொண்டிருக்கிறோம்.

நாட்டின் விடுதலைக்காக எண்ணற்றோர் உயிர் தியாகம் செய்துள்ளனர்.

கனவுகள் உயர்வாக இருக்கும்போது தான் திறன்களும் உயர்ந்ததாக இருக்கும்.

நாம் கண்ட மிகப்பெரிய கனவுகள் தான் தற்போது நமது எண்ணங்களை விரிவாக்கி உள்ளது.

உலகம் இன்று நம்மை பார்க்கும் விதம் மாறி உள்ளது - பிரதமர் மோடி

நாட்டில் எலக்ட்ரானிக் பொருட்களின் உற்பத்தி 7 மடங்கு உயர்ந்துள்ளது.

தேசத்தின் அனைத்து பிரிவு மக்களும் நாட்டை முன்னேற்றி கொண்டிருக்கின்றனர் - பிரதமர் மோடி

12 ஆண்டுகளில் இந்தியாவின் டிஜிட்டல் பண பரிவர்த்தனை 100 சதவீதத்தை எட்டி உள்ளது.

நமது வாழ்வில் பெரிதாக சாதிக்க வேண்டும் எனில் ஒவ்வொரு இந்தியரும் கனவு காண வேண்டும் - பிரதமர் மோடி

இந்தியா அனைத்து நாடுகளுக்கும் முன்னோடியாக சென்று கொண்டிருக்கிறது - பிரதமர் மோடி

2047-ல் 100 ஜிகாவாட் அணுசக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது - பிரதமர் மோடி

இந்தியா தற்சார்பு அடைய வேண்டியது காலத்தின் கட்டாயம் - பிரதமர் மோடி

நமது நாட்டின் டிஜிட்டல் பரிவர்த்தனை கடந்த 12 ஆண்டுகளில் 100 மடங்கு அதிகரித்துள்ளது - பிரதமர் மோடி

அனைவரது மனதிலும் மூவர்ணம் நிறைந்துள்ளது. நாடெங்கிலும் வந்தே மாதரம் பாடல் எதிரொலிக்கிறது - பிரதமர் மோடி

அனைத்து பிரிவு மக்களும் நாட்டை முன்னேற்றி கொண்டிருக்கின்றனர். நமது கனவுகளை தடுத்து நிறுத்துவது சாத்தியமற்றது - பிரதமர் மோடி

இணையத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 4 மடங்கு உயர்ந்துள்ளது.

மிகப்பெரிய செமி கண்டக்டர் ஆலைகள் வர உள்ளன - பிரதமர் மோடி

ஒவ்வொரு இந்தியரும் இணைந்து இந்தியா வளர்ச்சி அடைந்த நாடு என்ற கனவை 2047-ம் ஆண்டில் நனவாக்குவோம் - பிரதமர் மோடி

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா பல்வேறு வரலாற்று சாதனைகளை படைத்துள்ளது - பிரதமர் மோடி பெருமிதம்

நாட்டு மக்கள் 25 கோடி பேர் வறுமையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர் - பிரதமர் மோடி

உற்பத்தி துறையில் மேலும் வளர்வது கட்டாயம் - பிரதமர் மோடி

உலகளவில் ஈர்க்கும் வகையில் பொருட்களை தயாரிக்க வேண்டும் - பிரதமர் மோடி

நமது தேவைகளுக்காக பிற நாடுகளை எப்போதும் சார்ந்திருக்க முடியாது. நாம் தற்சார்பு அடைய வேண்டியது காலத்தின் கட்டாயம் - பிரதமர் மோடி

வரும் 2047-ம் ஆண்டுக்குள் 100 ஜிகாவாட் அணுசக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது - பிரதமர் மோடி

40-க்கும் மேற்பட்ட நாடுகளுடன் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம். வர்த்தக ஒப்பந்தத்தால் மீனவர்கள், விவசாயிகள் பயன் - பிரதமர் மோடி

நாம் கண்ட மிகப்பெரிய கனவுகள் நமது எண்ணங்களை விரிவாக்கி உள்ளது. கனவு உயர்வாக இருந்தால் திறனும் உயரும் - பிரதமர் மோடி

சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியேற்றுவதற்காக முதலமைச்சர் விஜய் வருகை.

திறந்தவெளி வாகனத்தில் சென்று காவல்துறையினரின் அணிவகுப்பினை பார்வையிடுகிறார் முதலமைச்சர் விஜய்

முதலமைச்சர் விஜய்க்கு முப்படை மற்றும் சிறப்பு காவல் படை உள்ளிட்ட படையினர் அணிவகுப்பு மரியாதை.

தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய் கோட்டை கொத்தளத்தில் முதன்முறையாக தேசியக்கொடி ஏற்றினார்.

நாட்டின் 80-வது சுதந்திர தினத்தையொட்டி கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றி வைத்து முதலமைச்சர் விஜய் உரையாற்றினார்.

கோட்டையில் கொடியேற்றுவதை பார்க்க வந்துள்ள மக்களுக்கும், என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களுக்கும் வாழ்த்து - முதலமைச்சர் விஜய்

லஞ்சம், ஊழலற்ற தமிழகம் என்பதை நோக்கியே நமது தவெக அரசு செயல்பட்டு வருகிறது - முதலமைச்சர் விஜய்

இந்த விழாவில் என்னை பேச வைத்த உலகம் முழுவதும் உள்ள தமிழக மக்கள், GenZ இளைஞர்களுக்கும் நன்றி - முதலமைச்சர் விஜய்

தமிழக மக்கள் நலனுக்காக மட்டுமே நிர்வாக ரீதியாக மத்திய அரசுடன் ஒத்துழைப்பு தருகிறோம் - முதலமைச்சர் விஜய்

தமிழக நலனுக்கு எதிராக, மாநில உரிமைக்கு பிரச்சனையாக எது வந்தாலும் தவெக அரசு எதிர்க்கும் - முதலமைச்சர் விஜய்

தமிழ்நாட்டை முன்மாதிரி மாநிலமாக்குவதுடன் 2036-ம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைவோம் - முதலமைச்சர் விஜய்

தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது - முதலமைச்சர் விஜய்

முன்னாள் படை வீரர்களின் 2 மகள்களுக்கு வழங்கும் திருமண நிதியுதவி ரூ.25,000-ல் இருந்து ரூ.50,000ஆக உயர்வு - முதலமைச்சர் விஜய்

மாற்றுத்திறன் கொண்ட முன்னாள் படைவீரர்களின் குடும்பத்திற்கான மாதாந்திர நிதியுதவி ரூ.5000-ல் இருந்து ரூ.7000 ஆக உயர்வு முதலமைச்சர் விஜய்

விடுதலை போராட்ட வீரர்கள் ஓய்வூதியம் ரூ.25,000 ஆக உயர்வு - முதலமைச்சர் விஜய்

எம்.கிருஷ்ணசாமிக்கு தகைசால் தமிழர் விருது, நீரிழிவு நோய் நிபுணர் மோகனுக்கு அப்துல் கலாம் விருதை வழங்கினார் முதலமைச்சர் விஜய்

உலகின் கடினமான மாரத்தானில் ஒன்றான டென்சிங் ஹிலாரி எவரெஸ்ட் மாரத்தானை 2 முறை வென்ற நவ்ஷீனுக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கினார் முதலமைச்சர் விஜய்

முதலமைச்சரின் நல் ஆளுமை விருதை நீலகிரி ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யாவுக்கு வழங்கினார் முதலமைச்சர்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சிருஷ்டி பவுண்டேஷனுக்கு சிறந்த தொண்டு நிறுவனத்திற்கான விருதை வழங்கினார் - முதலமைச்சர் விஜய்

விருதாளர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார் முதலமைச்சர் விஜய்

காரில் இருந்து இறங்கி சாலையில் நடந்து சென்றவாறு மக்களை சந்தித்தார் முதலமைச்சர் விஜய்

சாலையின் இருபுறமும் உள்ள மக்களை பார்த்து கை அசைத்தவாறு நடந்து சென்றார் முதலமைச்சர் விஜய்

முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுகள் ஆண்களில் 3 பேருக்கும், பெண்களில் இருவருக்கும் வழங்கப்பட்டது.

திருப்பூர் இம்மானுவேல் நெல்சன், தூத்துக்குடி சரவண குமார், சேலம் நிர்மல் கதிர்வேலு, மயிலாடுதுறை ராஜேஸ்வரி மகாதேவன், மதுரை சிந்தாவுக்கு முதலமைச்சரின் இளைஞர் விருது வழங்கப்பட்டது.

சமத்துவம், சமூகநீதி தழைத்தோங்கும் இந்தியாவை உருவாக்க உறுதி ஏற்போம்- முதலமைச்சர் விஜய்

* சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் விஜய் தேசிய கொடி ஏற்றி வைத்தார்.

* மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சுதந்திர தின விழாவை 2-வது ஆண்டாக புறக்கணித்த கார்கே, ராகுல் - காரணம் இதுதான்!

* டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.

* மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி மத்திய மந்திரிக்கு இணையான அந்தஸ்து கொண்டவர்.

சீன அச்சுறுத்தல்: தைவானில் முடங்கிய இணைய சேவை! போர்க்கால அவசரநிலை சோதனை

*இணையம் மற்றும் 4G/5G நெட்வொர்க் முற்றிலும் முடங்கும் போது, நாட்டின் மக்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு அமைப்புகள் எவ்வாறு தொடர்பில் இருப்பது என்பதைத் தைவான் பரிசோதித்தது.

*பல பயனர்களுக்கு டிக்டாக் செயலி திறக்கவே இல்லை; இன்ஸ்டாகிராமில் ஒரு மெசேஜ் செல்ல 30 வினாடிகளுக்கு மேல் ஆனதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

டிஜிட்டல் ஊடகங்களுக்கு இணையான சமவாய்ப்பு: டிவியின் 12 நிமிட விளம்பரக் கட்டுப்பாட்டை நீக்கியது மத்திய அரசு!...

*தற்போதுள்ள காலகட்டத்தில் டிஜிட்டல் மற்றும் சமூக ஊடக தளங்களில் விளம்பரங்களுக்கு எந்தவித கால வரம்பும் கிடையாது.

*இதனால் பாரம்பரிய தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு கடும் வருவாய் இழப்பும் சமமற்ற போட்டியும் ஏற்பட்டு வந்தது.

24 மணி நேரத்திற்குள் மாற்றம்: என்ரிகா நிறுவனத்தின் 11 மதுபான வகைகளுக்கான தடையை நீக்கியது டாஸ்மாக் நிர்வாகம்!...

*11 மதுபான வகைகளையும் சில்லறை விற்பனைக் கடைகளுக்கும், FL-2 மற்றும் FL-3 உரிமம் பெற்ற ஹோட்டல்கள் மற்றும் கிளப்புகளுக்கும் விநியோகிப்பதை உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

*என்ரிகா நிறுவனத்தின் தயாரிப்புகளை மீண்டும் சில்லறை விற்பனை நிலையங்களுக்கு அனுப்பும் பணிகள் தொடங்கியுள்ளன.

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: முதல் சதத்தை பதிவு செய்தார் தேவ்தத் படிக்கல்

* டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

* கே.எல்.ராகுல், தேவ்தத் படிக்கல் ஜோடி பொறுப்புடன் ஆடியது.

டார்வின் டெஸ்டில் வங்கதேசம் 426 ரன்கள் குவிப்பு: 2வது இன்னிங்சிலும் ஆஸ்திரேலியா திணறல்

* வங்கதேசம் முதல் இன்னிங்சில் 426 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

* ஆஸ்திரேலிய அணியின் ஜோஷ் ஹேசில்வுட் 6 விக்கெட் வீழ்த்தினார்.

மாநில அந்தஸ்தை பறிக்காமல் இருந்திருந்தால், PoK மக்கள் ஜம்மு-காஷ்மீருடன் இணைய கிளர்ந்து எழுந்திருப்பார்கள்- உமர் அப்துல்லா

* என்றாவது ஒரு நாள் அந்த இடங்கள் நிரப்பப்படும் என்ற நம்பிக்கையில், சட்டப்பேரவையில் அந்தப் பகுதிக்கான இடங்களை நாங்கள் காலியாக வைத்துள்ளோம்.

* மாநில அந்தஸ்து மற்றும் அரசியலமைப்பு ரீதியான உத்தரவாதங்களை மீட்டெடுப்பதற்கும், ஜம்மு-காஷ்மீரை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கும் எங்கள் அரசு உறுதியுடன் உள்ளது. இந்த இலக்குகளை நிறைவேற்ற நாங்கள் பாடுபடுவோம்.

இளைஞர்களுக்கு மாவட்ட செயலாளர் பதவி - ஸ்டாலின் அறிவிப்பு!

* வயது வரம்பு: 70க்கு மேல் உள்ளவர்கள் நீக்கம், இளைஞர்களுக்கு மாவட்ட பொறுப்பு கிடைக்கும்.

* புதிய நியமனங்கள்: 78 மாவட்ட செயலாளர்கள் மாற்றம், புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம்.

அரசியல் விளையாட்டில் பெண்கள் பகடைக்காய்கள் அல்ல: நயினார் நாகேந்திரனுக்கு குஷ்பு கண்டனம்

* எந்த ஒரு தளத்திலும் இத்தகைய கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை.

* ஒரு பெண்ணின் - ஒரு தாயின் - காரணமாகவே நீங்கள் இந்த உலகில் இருக்கிறீர்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com