
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததை அடுத்து, 50-வது பட்டாலியனின் இந்தோ- திபெதட்திய எல்லைக் காவல்துறை மற்றும் நிறுவன பணியாளர்கள் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இதில், சுரங்கப்பாதையில் இருந்து மீட்கப்பட்ட பணியாளர்களில் இரண்டு பேர் பலியாகி உள்ளனர். இறந்தவர்கள் இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜார்கண்டை சேர்ந்த நீர்மின் நிலையத்தில் பணிபுரியும் பணியாளர்கள் என்று தெரியவந்துள்ளது. மேலும் படுகாயமடைந்த மூன்று பேரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்.. தமிழகத்தில் நாளை மறுநாள் 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு