
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்.
உத்தரகாண்ட் மாநிலம் உதம் சிங் நகர் மாவட்டம் காஷிபூர் நகரத்தைச் சேர்ந்தவர் பிரஜ்நந்தன் பிரசாத் ரஸ்தோகி. இவரது இரண்டு மகள்கள் சரோஜ் மற்றும் அனிதா. இவர்கள் டெல்லி மற்றும் மீரட்டில் வசித்து வருகின்றனர்.
பிரஜ்நத்தன் கடந்த 2003-ம் ஆண்டில் இறந்துவிட்டார். ஆனால் அவர் உயிருடன் இருக்கும்போது தனது விவசாய நிலத்தில் இரண்டரை ஏக்கரை ஈக்தாவை விரிவாக்கம் செய்ய நன்கொடையாக நழங்க விரும்புவதாக தனது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.
20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துபோன தங்களது தந்தையின் கடைசி ஆசை குறித்து மகள்கள் இருவருக்கும் சமீபத்தில் தெரியவந்துள்ளது.
தொடர்ந்து, "தந்தையின் கடைசி விருப்பத்திற்கு மதிப்பளிப்பது எங்கள் கடமையாகும். எனது சகோதரிகள் அவரது ஆன்மா சாந்தியடையச் செய்யும் வேலையைச் செய்திருக்கிறார்கள்" என்று ராகேஷ் ரஸ்தோகி கூறினார்.
பின்னர் இதுகுறித்து ஈக்தா கமிட்டியின் ஹசின் கான் கூறியதாவது:-
சகோதரிகள் இருவரும் வகுப்புவாத ஒற்றுமைக்கு ஒரு உயிருள்ள உதாரணம். ஈத்கா கமிட்டி அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. சகோதரிகள் இருவரும் அவர்கள் செய்த நற்செயலுக்காக விரைவில் பாராட்டப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்.. தேர்வு அறையில் முகக்கவசம் கட்டாயமா?- விளக்கமளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்