சென்னையை அடுத்த தாம்பரம் புதிதாக உருவாக்கப்பட்ட மாநகராட்சி ஆகும். இப்போது நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 70 வார்டுகளில் போட்டியிட்ட தி.மு.க. கூட்டணி 56 வார்டுகளில் வெற்றி பெற்றது. 9 வார்டுகளில் அ.தி.மு.க. கூட்டணி ஜெயித்தது.
இதனால் தி.மு.க.வை சேர்ந்த வசந்தகுமாரி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மற்ற பதவிகளுக்கும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதையொட்டி தாம்பரம் மாநகராட்சியின் முதல் மன்ற கூட்டம் நாளை காலை (திங்கள்கிழமை) 10 மணிக்கு நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் உறுப்பினர்கள் பார்வைக்கு 171 ‘சப்ஜெக்ட்’ வைக்கப்படுகிறது.
மாநகராட்சிக்கு தனியாக சின்னம் தயாரிக்கப்பட்டு மன்றத்தின் பார்வைக்கு வைக்கப்படுகிறது. குடிநீர், கழிவுநீர், சொத்துவரி, கடை ஏலம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றி நாளைய கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.



கொரோனா பரவல் உயர்வு எதிரொலி - முதல் மந்திரிகளுடன் பிரதமர் மோடி 27ம் தேதி ஆலோசனை
போலீசார் முன்னிலையில் பா.ஜ.க தலைவர் தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு - மும்பையில் பரபரப்பு
இந்தியா வந்தடைந்தார் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர்
லைவ் அப்டேட்ஸ் உக்ரைன் - அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மற்றும் பாதுகாப்புத்துறை செயலாளர் இன்று கீவ் வருகை
ஜி.எஸ்.டி. அதிகாரிகள் சோதனையில் சிக்கிய கட்டுக்கட்டான பணம், வெள்ளிக்கட்டிகள் - மும்பையில் பரபரப்பு

