
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக 4 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து தெற்கு ரெயில்வே இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தெற்கு மத்திய ரெயில்வே ஆலோசனையின் பேரில் ரெயில்களை இயக்க முடியாத சூழ்நிலையில் 4 ரெயில்கள் இன்று முதல் வருகிற 24-ந்தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
* திருப்பதியில் இருந்து இரவு 7.25 மணிக்கு காட்பாடிக்கு புறப்படும் பாசஞ்சர் சிறப்பு ரெயில்.
* காட்பாடியில் இருந்து காலை 6.15 மணிக்கு புறப்படும் திருப்பதி பாசஞ்சர் ரெயில்.
* ஆந்திர மாநிலம் பித்தர குண்டாவில் அதிகாலை 4.45 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில்.
* சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 4.30 மணிக்கு பித்ராகுண்டா புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ரெயில்களை இயக்குவதற்கான ஊழியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதால் ரெயில்களை இயக்க முடியவில்லை என்று தெரியவருகிறது.