

விஜயகாந்த் மகன்கள் விஜயபிரபாகரன், சண்முக பாண்டியனும் ஒன்றாக வந்து வாக்குப்பதிவு செய்தனர். அப்போது விஜயபிரபாகரன் நிருபர்களிடம் கூறுகையில், ‘எங்கள் கூட்டணி அனைத்து இடங்களிலும் நன்றாக செயல்படுகிறது. அப்பா (விஜயகாந்த்) சொல்வது போல மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. இனி மக்கள் கையில் தான் இருக்கிறது. தே.மு.தி.க. வெற்றி வாய்ப்பு நன்றாக இருக்கிறது' என்று கூறினார்.
அப்போது அவரிடம், 'விஜயகாந்த் ஓட்டு போட வருவாரா?' என்று நிருபர்கள் கேட்டதற்கு, ‘தலைவர் மாலையில் வந்து ஓட்டுபோடுவார்ஞ’ என்று பதிலளித்து சென்றார். எனவே விஜயகாந்த் ஓட்டுபோட வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசிவரை அவர் வாக்களிக்க வரவில்லை.
இதுகுறித்து தே.மு.தி.க. வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளதால் விஜயகாந்த் தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு வாக்களிக்க வரவில்லை’ என்று கூறினர்.