
சென்னை:
தி.நகரில் உள்ள இல்லத்தில் ஜெயலலிதா படத்திற்கு மரியாதை செலுத்திய சசிகலா, ‘அனைவரும் ஒன்றுபட்டு தேர்தலை சந்திக்க வேண்டும். ஜெயலலிதா உடன்பிறப்புகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்’ என்று அழைப்பு விடுத்தார்.
இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று அளித்த பேட்டி வருமாறு:-
சசிகலா ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்று அழைத்து இருப்பது அ.தி.மு.க.வினருக்கு பொருந்தாது. அ.ம.மு.க.வினரைத்தான் அவர் அழைத்துள்ளார்.
சசிகலாவை இன்று சந்தித்துள்ள சரத்குமார், அ.தி.மு.க. கூட்டணியில்தான் நீடிக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.