
இந்தியாவில் கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது வாகன ஓட்டிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே பொதுமக்கள் இயற்கை எரிவாயு பயன்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் மத்திய சாலைகள் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, ‘கோ எலக்ட்ரிக்’ எனற திட்டத்தின் பிரச்சாரத்தில் பேசிய போது, நாட்டில் மின்சார வாகனங்களை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
சமையல் எரிவாயுவுக்கு மானியம் வழங்குவதற்கு பதிலாக, மின் சமையல் சாதனங்களுக்கு அரசு மானியம் வழங்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரை செய்தார். மேலும் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களை சார்ந்திருப்பதை குறைக்கும் முயற்சியாக, அனைத்து அரசு ஊழியர்களும் மின்சார வாகனங்களை பயன்படுத்துவதை கட்டாயமாக்க வேண்டும் என நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார்.