
சென்னை:
ம.தி.மு.க. சார்பில் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கழக வளர்ச்சி நிதி, தேர்தல் நிதி பெறுவதற்காக வருகிற 12-ந் தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
அன்று மாலை 4 மணிக்கு நெல்லையில் நடைபெறும் கூட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.
அதனைத் தொடர்ந்து 13-ந் தேதி காலை 10.30 மணிக்கு மதுரையில் நடைபெறும் கூட்டத்தில் சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மாநகர் நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.
மாலை 4 மணிக்கு திருச்சியில் நடைபெறும் கூட்டத்தில் திருச்சி மாநகர், திருச்சி புறநகர் தெற்கு, வடக்கு, அரியலூர், கரூர், புதுக்கோட்டை நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.
14-ந் தேதி காலை 10.30 மணிக்கு தஞ்சாவூரில் நடைபெறும் கூட்டத்தில் தஞ்சாவூர் தெற்கு, வடக்கு, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.
15-ந் தேதி காலை 10 மணிக்கு கோவையில் நடைபெறும் கூட்டத்தில் கோவை மாநகர், கோவை புறநகர் தெற்கு, வடக்கு, திருப்பூர் புறநகர்,திருப்பூர் மாநகர் நிர்வாகிகளும், மாலை 4 மணிக்கு ஈரோட்டில் நடைபெறும் கூட்டத்தில் நாமக்கல், ஈரோடு மாநகர், ஈரோடு கிழக்கு, மேற்கு நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.
16-ந் தேதி காலை சேலத்தில் நடைபெறும் கூட்டத்தில் சேலம் மத்தியம், சேலம் கிழக்கு, மேற்கு, தருமபுரி, கிருஷ்ணகிரி நிர்வாகிகளும், மாலை 4 மணிக்கு திருவண்ணாமலையில் நடைபெறும் கூட்டத்தில் திருவண்ணாமலை வடக்கு, தெற்கு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் நிர்வாகிகளும் கலந்து கொள்கிறார்கள்.
17-ந் தேதி காலை 10 மணிக்கு சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு, கிழக்கு, வடக்கு, திருவள்ளூர் நிர்வாகிகளும், மாலை 4 மணி கூட்டத்தில் வடசென்னை கிழக்கு, மேற்கு, தென் சென்னை கிழக்கு, தென்சென்னை மேற்கு நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.
18-ந் தேதி காலை விழுப்புரத்தில் நடைபெறும் கூட்டத்தில் விழுப்புரம் வடக்கு, தெற்கு, கடலூர் தெற்கு, கிழக்கு, மேற்கு பகுதி நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.