
கேரளா மாநிலத்தில் இன்று புதிதாக 5,490 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8.31 லட்சமாக அதிகரித்துள்ளது.
இன்று 4,337 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,61,154 ஆக அதிகரித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 67,712 ஆக அதிகரித்துள்ளது.
மாநிலத்தில் கொரோனா தொற்றால் 19 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த எண்ணிக்கை 3,392 ஆக உயர்ந்துள்ளது.