
ஐரோப்பிய நாடான போர்ச்சுகல் நாட்டில் ஆரம்ப காலத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் வைரஸ் பரவல் பெருமளவு கட்டுக்குள் வந்ததையடுத்து ஊரடங்கு தளர்த்தப்பட்டது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் போர்ச்சுகலில் மீண்டும் ஊடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாளை (ஜனவரி 15) முதல் ஒரு மாதத்திற்கு ஊரடங்கு அமலில் இருக்கும் என போர்ச்சுகல் பிரதமர் அண்டனியோ காஸ்டா தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் மக்கள் வீடுகளிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுளது. அத்தியாவசிய காரணங்களுக்காக மக்கள் வீட்டை விட்டு வெளியே வர அனுமதிக்கப்பட்டுள்ளனர்.