
இதையடுத்து, நாடு முழுவதும் வரும் 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்குகிறது. முதல்கட்டமாக சுகாதார ஊழியர்கள், முன்கள ஊழியர்களான போலீசார், பாதுகாப்பு படையினர் என மொத்தம் 3 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்ட உள்ளது.
இதற்காக, அனைத்து மாநிலங்களுக்கும் கொரோனா தடுப்பூசி வினியோக நடைமுறைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடர்பாக மாநில முதல்மந்திரிகளுடன் பிரதமர் நரேந்திரமோடி இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-
* முதல்கட்டமாக சுகாதார ஊழியர்கள் மற்றும் முன்கள ஊழியர்கள் 3 கோடி பேருக்கு தடுப்பூ போடப்பட உள்ளது.
* இந்த பட்டியலில் அரசியல்வாதிகள் இடம்பெறவில்லை.
* கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசியல்வாதிகள் முந்தக்கூடாது.
* தங்களுக்கான முறை வரும்போது அரசியல்வாதிகள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
என்றார்.