
சிட்னி டெஸ்டில் 407 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. நேற்றைய 4-ம் நாள் ஆட்ட முடிவில் முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்க 98 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 9 ரன்களுடனும், ரகானே 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இதையடுத்து, ஹனுமா விஹாரி களமிறங்கினார். புஜாராவும், விஹாரியும் இணைந்து இந்தியாவை வெற்றியை நோக்கி அழைத்து செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 77 ரன் எடுத்த நிலையில் புஜாராவும் வெளியேறினார். இதனால், ஆஸ்திரேலியா வெற்றிபெற்றுவிடுமோ என்ற நிலை ஏற்பட்டது.
ஆனால், அடுத்து களமிறங்கிய ரவிசந்திரன் அஸ்வின் , விஹாரியுடன் ஜோடி சேர்ந்து இந்திய அணி தோல்வியை சந்திக்கவிடாமல் தடுத்தது. இரு வீரர்களுமே தடுப்பு ஆட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில், சிட்னி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் இந்திய வீரர்களே வேண்டுமேன்ற வம்புக்கு இழுக்கும் நிகழ்வுகள் நடைபெற்றன. ஆஸ்திரேலிய ரசிகர்கள் இந்திய வீரர்கள் மீது இனவெறி தாக்குதலில் ஈடுபட்டதும் கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இன்றைய 5-ம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய கேப்டன்\விக்கெட் கீப்பர் டிம் பெயின் பேட்டிங் செய்துகொண்டிருந்த இந்திய வீரர் அஸ்வினை கிண்டல் அடிக்கும் வகையில் கருத்து தெரிவித்தார். டிம் பெயினின் கருத்துக்கு அஸ்வின் தக்க பதிலடி கொடுத்தார்.
டிம் பெயின் கூறுகையில், ’காத்திருக்க முடியவில்லை. காபாவுக்கு (பிரிஸ்பென் மைதானத்தின் புனைப்பெயர்) வாருங்க... உங்களுடன் விளையாட மிகுந்த ஆவலாக உள்ளோம் அஸ்வின்’ என்றார்.
டிம் பெயினின் கருத்துக்கு உடனடியாக பதிலடி கொடுத்த அஸ்வின், ‘அதேபோல் தான் நீங்கள் இந்தியாவுக்கு வாருங்க... உங்களுடன் நாங்கள் விளையாட ஆவலாக உள்ளோம். அதுதான் உங்கள் (டிம்ப் பெயின்) கடைசி டெஸ்ட் தொடராக இருக்கும்’ என்றார்.
I want Ashwin's autograph 😂. Roasted the "temporary captain" Tim Paine#INDvAUS#stevesmith#Wade#Ashwin#TimPainepic.twitter.com/IkH8SoYKzS
— ARYAN TRIPATHI (@AryanTripathi_2) January 11, 2021