
மகாராஷ்டிரா மாநிலம் பந்த்ரா மாவட்டத்தில் 4 மாடிகளைகொண்ட அரசு மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகளும், பிறக்கும் போதே குறைபாடு உள்ள குழந்தைகளும் சிகிச்சை பெறுவதற்காக சிறப்பு சிகிச்சை பிரிவு உள்ளது.
இந்த வார்டில் 17 குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்கள் பிறந்து ஒரு மாதம் முதல் 3 மாதங்கள் வரையிலான குழந்தைகள் ஆவர். அவர்களுக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்த மகாராஷ்டிரா முதல்மந்திரி உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், தீ விபத்தில் உயிரிழந்த ஒரு குழந்தை குடும்பத்தினர் வீட்டிற்கு முதல்மந்திரி உத்தவ் தாக்கரே இன்று நேரில் சென்றார். அங்கு உயிரிழந்த குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்களை சந்தித்து அவர் ஆறுதல் கூறினார்.
மேலும், இந்த விபத்துக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்மந்திரி உத்தவ் தெரிவித்தார்.