
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதற்கு, நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் அதிக அளவிலான பரிசோதனைகளும் முக்கிய காரணம் ஆகும்.
அந்தவகையில் இதுவரை செய்யப்பட்ட பரிசோதனை 18 கோடியை தாண்டி உள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இன்று வெளியிட்ட தகவலின் படி, நாட்டில் இதுவரை 18 கோடியே 2 லட்சத்து 53 ஆயிரத்து 315 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது.
இதில் நேற்று மட்டும் 9,16,951 லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 18,222 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதனால் மொத்த பாதிப்பு 1,04,31,639 ஆக உயர்ந்துள்ளது. நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 5,142, மராட்டியத்தில் 3,693 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதுவரை மராட்டியத்தில் 19,61,975, கர்நாடகாவில் 9,25,868, ஆந்திராவில் 8,84,490, தமிழ்நாட்டில் 8,24,776, கேரளாவில் 8,01,075, டெல்லியில் 6,29,282, உத்தரபிரதேசத்தில் 5,91,610, மேற்குவங்கத்தில் 5,59,099 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மற்ற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் பாதிப்பு 5 லட்சத்திற்கும் குறைவாக உள்ளது.
கொரோனா பாதிப்பால் மராட்டியத்தில் 73 பேர் உள்பட நாடு முழுவதும் நேற்று 228 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 1,50,798 ஆக உயர்ந்துள்ளது. இதில் மராட்டியத்தில் மட்டும் 49,970 பேர் அடங்குவர்.
கர்நாடகாவில் 12,134, ஆந்திராவில் 7,127, தமிழ்நாட்டில் 12,208, கேரளாவில் 3,258, டெல்லியில் 10,654, உத்தரபிரதேசத்தில் 8,469, மேற்குவங்கத்தில் 9,902, ராஜஸ்தானில் 2,727 , சத்தீஸ்கரில் 3,469, அரியானாவில் 2,943, குஜராத்தில் 4,335, மத்திய பிரதேசத்தில் 3,691, பஞ்சாபில் 5,437 பேர் இறந்துள்ளனர். மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உயிரிழப்பு 2 ஆயிரத்திற்கும் குறைவாக உள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 19,253 பேர் மீண்டுள்ளனர். இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1,00,56,651 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது 2,24,190 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதில் அதிகபட்சமாக கேரளாவில் 64,434, மராட்டியத்தில் 53,006, உத்தரபிரதேசத்தில் 11,535 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன்பிரதேசங்களில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்திற்கும் குறைவாக உள்ளது.