
சென்னை போயஸ் கார்டனில் பட்டாசு வெடித்து உற்சாகத்துடன் காணப்பட்ட அடையாறு பகுதியை சேர்ந்த நரசிம்மன்- காயத்ரி தம்பதியினர் கூறியதாவது:-
ரஜினிகாந்தின் நீண்டகால ரசிகர்கள் நாங்கள். அவரது அரசியல் அறிவிப்பு எங்களுக்கெல்லாம் பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது. ஆனாலும் ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து கேள்விப்பட்டதும் நாங்கள் மிகவும் நொந்து போனோம். இதனால் அவர் அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என்ற கேள்விக்குறி எழுந்தது. ஆனாலும் மக்கள் நலன் தான் முக்கியம் என தலைவர் களம் இறங்கியது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளித்துள்ளது.
ஜெயலலிதாவுக்கு பிறகு போயஸ் கார்டனில் இருந்து இன்னொரு நட்சத்திரமாக அரசியலில் களம் இறங்கும் ரஜினிகாந்த் சாதிப்பது நிச்சயம். எங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை. டிசம்பர் 31-ந்தேதிக்காக இப்போதே காத்திருக்கிறோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.