
கடந்த நவம்பர் மாதம் ஜி.எஸ்.டி. மூலம் ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 963 கோடி வசூலாகி உள்ளது. இது, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கிடைத்த ஜி.எஸ்.டி. வசூலை விட 1.4 சதவீதம் அதிகம் ஆகும்.
கடந்த அக்டோபர் மாதம், ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 155 கோடி ஜி.எஸ்.டி. வசூல் கிடைத்தது. இதனால், நடப்பு நிதியாண்டில், தொடர்ந்து 2-வது மாதமாக ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1 லட்சம் கோடியை தாண்டி உள்ளது.