
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள நிவர் புயல் சென்னையிலிருந்து 450 கி.மீ., புதுச்சேரியிலிருந்து 410 கி.மீ. தொலைவில் கடந்த 3 மணி நேரமாக மையம் கொண்டுள்ளது.
நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
புயல் தாக்கினால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.