
சென்னைக்கு தென்கிழக்கே 450 கி.மீ., புதுச்சேரிக்கு அருகே 410 கி.மீ. தொலைவில் நிவர் புயல் மையம் கொண்டுள்ளது.
நிவர் புயல் 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மேலும் வலுப்பெறும். தீவிர புயலான நிவர் புயல் நாளை மாலை கரையை கடக்க உள்ளது.
நிவர் புயல் காரணமாக நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 5ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
கடலூர் துறைமுகத்தில் 7ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
சென்னை எண்ணூர் துறைமுகத்தில் 6ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.