
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே செங்குளத்தில் உள்ள பட்டாசு ஆலையில் எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டு 7 பெண்கள் இறந்துள்ளனர் அதோடு 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
வருங்காலங்களில் இது போன்ற விபத்துகள் நடை பெறாதவாறு ஆலை நிர்வாகம் பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும். அரசும் அடிக்கடி முறையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அதோடு காயமுற்று சிகிச்சை பெற்றுவருபவர்கள் பூரண நலம்பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.