
இதுகுறித்து விசாரணை நடத்திய டெல்லி போலீஸ் வன்முறையில் ஈடுபட்டதாக சந்தேகத்திற்குரிய நபர்களின் 9 பேர் படங்களை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில் ‘‘டெல்லி போலீசார் உண்மையை வெளிக்கொண்டு வந்துள்ளனர். படங்களை பார்க்கும்போது இடது சாரி மாணவர்கள்தான் தாக்குதலில் ஈடுபட்டு வன்முறைக்கு காரணமாக இருந்துள்ளார்கள் என்பது தெளிவாகிறது.
ஏபிவிபி-யை அவமானம் படுத்தும் வகையில் தீய நோக்கமுடைய பிரசாரம் ஏவப்பட்டது. ஆனால் டெல்லி போலீசார் படத்தை வெளியிட்டு தெளிவிப்படுத்தியுள்ளனர்.
மாணவர்கள் அவர்களுடைய போராட்டத்தை நிறுத்த வேண்டும். அதன்பின் கல்வி தொடங்க அனுமதிக்க வேண்டும். அத்துடன் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்.
சிபிஐ, சிபிஐ(எம்), ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் நாடாளுமன்ற தேர்தலில் புறக்கணிக்கபட்டன. அதனால் இடது சாரிகள் அவர்களின் நலனுக்காக மாணவர்களை பயன்படுத்துகின்றனர்’’ என்றார்.