
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கடந்த 3 மாதங்களாக தென்னிந்திய பகுதிகளில் நிலவிய வடகிழக்கு பருவமழை பெரும்பாலும் குறைந்துவிட்டதால் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) வடகிழக்கு பருவமழை முற்றிலும் நிறைவு பெறும். வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகத்தில் இயல்பைவிட 2 சதவீதம் அதிக மழைப்பொழிவு பதிவாகி உள்ளது.

மதுரை, பெரம்பலூர், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய பகுதிகளில் சராசரியாக 24 சதவீதம் குறைவாக மழை பதிவாகி உள்ளது. அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலும் வறண்ட வானிலை காணப்படும். காலை நேரங்களில் பெரும்பாலான மாவட்டங்களில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.