
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே கால்நடை பெண் டாக்டர் பிரியங்கா ரெட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட விவகாரம் பாராளுமன்றத்தில் இன்று எதிரொலித்தது. மக்களவையில் எதிர்கட்சிகள் சார்பில் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. கேள்வி நேரத்திற்கு பிறகு இதற்கு அனுமதி அளிப்பதாக சபாநாயகர் ஓம்பிர்லா தெரிவித்தார்.

இந்தியாவில் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை. ஐதராபாத் பெண் டாக்டரை வன்கொடுமை செய்து கொலை செய்த 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். டிசம்பர் 31-ந் தேதிக்குள் அவர்கள் தூக்கிலிடப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
சமாஜ்வாடி கட்சி உறுப்பினர் ஜெயாபச்சன்:-
கற்பழிப்பு குற்றவாளிகளால் நாட்டுக்கு அவமானம் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை பொதுமக்கள் முன்னிலையில் அடித்து கொல்ல வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இந்த அரசு இதை தடுக்க என்ன செய்து கொண்டிருக்கிறது.
குலாம்நபி ஆசாத் (காங்கிரஸ்):-
அவைத்தலைவர் வெங்கயாநாயுடு கூறியதாவது:-
குற்றவாளிகள் கருணைக்கு தகுதியற்றவர்கள். இது சமூகத்துக்கு அவமானமாகும். இது போன்ற குற்றங்களை தடுப்பதற்கு புதிய மசோதா தேவையில்லை. மனமாற்றங்கள் மூலம் தீய எண்ணங்களை அழிக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.