

அதன்பின் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் பிரவீன், அவரது தந்தை சரவணக்குமார், ராகுல், அவரது தந்தை டேவிஸ், இர்பான், அவரது தந்தை முகமதுசபி ஆகியோரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். மேலும் மாணவி பிரியங்கா மற்றும் அவரது தாய் மைனாவதி ஆகியோரும் நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்டனர். இதில் மாணவர்கள் உதித்சூர்யா, ராகுல், பிரவீன், இர்பான், மாணவி பிரியங்கா, அவரது தாய் மைனாவதி ஆகியோருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
உதித்சூர்யா உள்ளிட்ட 4 மாணவர்களின் தந்தைகள் மட்டும் சிறையில் உள்ளனர். ராகுலின் தந்தை டேவிஸ், பிரவீனின் தந்தை சரவணக்குமார், இர்பானின் தந்தை முகமதுசபி ஆகியோரது காவல் இன்றுடன் முடிவடைவதை முன்னிட்டு இன்று தேனி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களது நீதிமன்ற காவலை மேலும் 15 நாட்களுக்கு நீட்டித்து வருகிற 22-ந் தேதி மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்த மாஜிஸ்திரேட் பன்னீர்செல்வம் உத்தரவிட்டார். இதனையடுத்து அவர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.