
நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி, தருமபுரி மாவட்டங்களில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்கள், அவர்களின் பெற்றோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர்.
இந்த வழக்கில் கைதான தர்மபுரியை சேர்ந்த மாணவி பிரியங்கா, அவரது தாயார் ஆகியோர் தங்களுக்கு ஜாமீன் வழங்கக்கோரி மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதி சுவாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மாணவியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அவருக்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
ஆனால் மாணவியின் தாயார் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுத்தததாக போலீசார் தெரிவித்ததால், மாணவியின் தாயாருக்கு ஜாமீன் வழங்க நீதிபதி மறுத்து விட்டார்.