
டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க. கட்சியின் முக்கிய நிர்வாகியாக இருந்து வந்தவர் புகழேந்தி. கர்நாடக மாநில செய்தி தொடர்பாளராகவும் அவர் பொறுப்பு வகித்து வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் டி.டி.வி. தினகரனுடன் புகழேந்திக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
டி.டி.வி. தினகரனை விமர்சித்து புகழேந்தி பேசிய வீடியோ வெளியானதால் அவர்களுக்குள் மோதல் வெடித்தது.

இதனால் புகழேந்தி அ.தி.மு.க.வில் சேருவார் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.
தினகரனுடன் இருக்கும் போது புகழேந்தி அ,தி.மு.க. பற்றி கடுமையாக விமர்சனம் செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அ.தி.மு.க.வில் இருந்தபோது கர்நாடக மாநில அ.தி.மு.க. செயலாளராகவும் இருந்து வந்தார்.
இந்த சூழ்நிலையில் அவர் இன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.