
நாகலாந்தின் தலைநகரான ஹோமியோவில் மிஸ் ஹோமியோ அழகிப்போட்டி நடைபெற்றது. அதில் பல பெண்கள் கலந்துகொண்டனர். விக்கானுவோ சச்சு என்ற 18 வயது பெண்ணும் கலந்து கொண்டார்.
அழகி போட்டியின் கேள்வி பதில் சுற்றின் போது நடுவர்கள் அவரிடம் ‘ பிரதமர் மோடியுடன் பேசுவதற்கு அழைக்கப்பட்டால் அவரிடம் நீங்கள் என்ன சொல்வீர்கள்’ என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் ‘மாடுகளை விட பெண்கள்மீது அதிக கவனம் செலுத்துங்கள்’ என்று அறிவுரை வழங்குவேன் எனத் தெரிவித்தார்.
இந்தப் பதிலைக் கேட்ட நடுவர்கள் மற்றும் பார்வையாளர்கள் பலமாக சிரித்தனர். அந்த பெண் பேசிய வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.