
உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரணவ் சிங் சாம்பியன். இவர் பாஜகவைச் சேர்ந்த எம்எல்ஏ ஆவார். பல்வேறு சர்ச்சைகளுக்குப் பெயர்போன இவர், தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
பிரணவ் தனது இரு கைகளிலும் துப்பாக்கிகளை வைத்துக் கொண்டு நண்பர்களுடன் குடித்து விட்டு ‘கேங்ஸ் ஆப் வஸிப்பர்’ படத்தில் வருவதைப்போல ஆடியுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனையடுத்து பிரணவை கட்சியில் இருந்து நீக்குமாறு உத்தரகாண்ட் மாநிலத்தின் கட்சித் தலைவர்கள் பரிந்துரைத்தனர்.
இதனையடுத்து பிரணவ் மீது ஒழுங்கு நடவடிக்கை காரணமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக கட்சி தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.