
முல்லைப் பெரியாறு அணையை கண்காணித்து பராமரிக்க மத்திய நீர் வள ஆணையர் தலைமை பொறியாளர் தலைமையில் மூவர் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில் தமிழகத்தின் சார்பில் ஒரு பிரதிநிதியும், கேரளா சார்பில் ஒரு பிரதிநிதியும் நியமிக்கப்பட்டனர்.
இக்குழுவுக்கு உதவ 5 பேர் கொண்ட துணைக்குழு நியமிக்கப்பட்டு அவர்கள் அவ்வப்போது அணையினை பார்வையிட்டு ஆய்வு செய்து, அது குறித்த அறிக்கையை மூவர் குழுவிற்கு சமர்ப்பித்து வருகின்றனர். அதன் அடிப்படையில் அணையின் பாதுகாப்பு குறித்து உறுதி செய்யப்படுகிறது.

தென்மேற்கு பருவமழை காலம் என்பதால் அணையின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக இந்த ஆய்வு நடைபெறுகிறது. அணைக்கு வரும் நீர்வரத்து மற்றும் கசிவுநீர் வெளியேற்றம் ஆகியவற்றை துணைக் குழு ஆய்வு செய்து அணையின் பாதுகாப்பு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யும்.