
மகாராஷ்டிரா மாநிலத்தின் லத்தூர் மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 19ம் தேதி பேரரசர் சத்ரபதி சிவாஜி ஜெயந்தியையொட்டி சிறப்பு ஏற்பாடுகள், கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
லத்தூரில் உள்ள நிலங்கா எனும் கிராமத்தில் சத்ரபதி சிவாஜியின் தோற்றம் ரங்கோலி ஓவியமாக தீட்ட திட்டமிடப்பட்டது. இதனையடுத்து இக்கிராமத்தில் 2.4 லட்சம் சதுர அடி அளவில் 6 ஏக்கர் பரப்பளவில் ரங்கோலி போட ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த ரங்கோலியினை கலைஞர் மங்கேஷ் நிபானிகர் என்பவர் தீட்டியிருந்தார். பிப்ரவரி மாதம் போடப்பட்ட இந்த ரங்கோலி, 3 மாதங்கள் கடந்தும், இப்போது தேடினாலும் கூகுள் மேப்பில் பிரம்மாண்டமாக தெரிகிறது.
♥️
— Godman Chikna (@Madan_Chikna) June 20, 2019
"People are turning to Google Maps to locate a crop art tribute to Chhatrapati Shivaji Maharaj" https://t.co/cM6oQkHmuG
இது தொடர்பாக கடந்த 18ம் தேதி வெளியிடப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து ரங்கோலி கலைஞர் மங்கேஷ் கூறுகையில், ‘கடந்த வருடத்தை விட இந்த வருடம் சற்று வித்தியாசமாக கொண்டாட திட்டமிட்டோம்.
இதனையடுத்து வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதியில் பச்சை நிறத்தில் சிவாஜியை ரங்கோலியில் வரைந்து முடித்தேன். இப்போது வரை நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது’ என கூறினார்.