
சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலில் தனது முதல்கட்ட பிரசாரத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கினார்.
ஜட்கல்பூர் பகுதியில் இன்று நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பேசிய மோடி, வாஜ்பாயின் கனவான வளமையான சத்தீஸ்கர் மாநிலத்தை உருவாக்கும்வரை நாங்கள் ஓயமாட்டோம் என்று தெரிவித்தார்.

இம்மாநிலத்தில் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கத்தை ஒழிக்க காங்கிரஸ் அரசு எதுவுமே செய்யவில்லை என்று குற்றம்சாட்டிய அவர், நகரங்களில் சொகுசு வாழ்க்கை நடத்தும் மாவோயிஸ்டுகளை காங்கிரஸ் ஆதரிப்பது ஏன்? எனவும் கேள்வி எழுப்பினார்.
மாவோயிஸ்டுகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும்போது அவர்களுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவிக்கிறது. நக்சல் கொள்கைக்கு எதிராக அக்கட்சி தலைவர்கள் பேச தயங்குகின்றனர்.
பஸ்ட்டர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு நீங்கள் வெற்றியை தேடித்தர வேண்டும். வேறு யாராவது வெற்றி பெற்றால் சத்தீஸ்கரையும் இந்த பஸ்ட்டர் பகுதியையும் முன்னேற்றும் கனவு நனவாகாமல் போய்விடும் என்றும் அவர் தெரிவித்தார். #urbanMaoists #Modi #Chhattisgarhpolls