search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சியோமி ரெட்மி 5: இந்திய வெளியீட்டு தேதி வெளியானது
    X

    சியோமி ரெட்மி 5: இந்திய வெளியீட்டு தேதி வெளியானது

    சியோமி நிறுவனத்தின் ரெட்மி 5 ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டிற்கான அழைப்பிதழ்களை வெளியிட்டுள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் 2018-ம் ஆண்டின் முதல் சாதனத்தை அறிமுகம் செய்வதற்கான தேதியை சியோமி அறிவித்துள்ளது. அறிமுக விழாவிற்கான அழைப்பிதழில் 5 எண் கொண்ட லோகோ பெரியதாக இடம்பெற்றிருக்கிறது. இது அந்நிறவனத்தின் புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனாக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    பிப்ரவரி 14-ம் தேதி இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் ரெட்மி 5 ஸ்மார்ட்போன் 2 ஜிபி, 3 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி, 32 ஜிபி இன்டெர்னல் மெமரி என இரண்டு வித ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதே விழாவில் ரெட்மி 5 பிளஸ் ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்படுமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.



    சீனாவில் ரெட்மி 5 ஸ்மார்ட்போன் பிளாக், கோல்டு, லைட் புளூ மற்றும் ரோஸ் கோல்டு உள்ளிட்ட நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் 2 ஜிபி ரேம் கொண்ட மாடலின் விலை CNY 799 (இந்திய மதிப்பில் ரூ.8,100), 3 ஜிபி ரேம் CNY 899 (இந்திய மதிப்பில் ரூ.9,100) என நிர்ணயம் செய்யப்பட்டது. 

    கடந்த மாதம் 4 ஜிபி ரேம் கொண்ட ரெட்மி 5 ஸ்மார்ட்போனினை CNY 1099 (இந்திய மதிப்பில் ரூ.11,200) அறிமுகம் செய்தது. இத்துடன் ரெட்மி 5 பிளஸ் 3 ஜிபி ரேம் ஸ்மார்ட்போன் CNY 999 (இந்திய மதிப்பில் ரூ.10,200), 4 ஜிபி ரேம் மாடல் CNY1,299 (இந்திய மதிப்பில் ரூ.13,200) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 



    ரெட்மி 5 சிறப்பம்சங்கள்:

    - 5.7 இன்ச் 1440x720 பிக்சல் எச்டி+ 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 450 
    - அட்ரினோ 506 GPU
    - 2 ஜிபி / 3 ஜிபி ரேம்
    - 16 ஜிபி / 32 ஜிபி இன்டெர்னல் மெமரி 
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 7.1.2 நௌக்கட் மற்றும் MIUI 9
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், 1.25μm பிக்சல், f/2.2 அப்ரேச்சர்
    - 5 எம்பி தெல்ஃபி கேமரா, எல்இடி பிளாஷ்
    - கைரேகை ஸ்கேனர்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3300 எம்ஏஎச் பேட்டரி



    ரெட்மி 5 பிளஸ் சிறப்பம்சங்கள்:

    - 5.99 இன்ச் 2160x1080 பிக்சல் எச்டி+ 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 625 
    - அட்ரினோ 506 GPU
    - 3 ஜிபி / 4 ஜிபி ரேம்
    - 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி 
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 7.1.2 நௌக்கட் மற்றும் MIUI 9
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், 1.25μm பிக்சல், f/2.2 அப்ரேச்சர்
    - 5 எம்பி தெல்ஃபி கேமரா, எல்இடி பிளாஷ்
    - கைரேகை ஸ்கேனர்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 4000 எம்ஏஎச் பேட்டரி
    Next Story
    ×