search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    31 நாட்களில் ஒரு கோடி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்த நிறுவனம்
    X

    31 நாட்களில் ஒரு கோடி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்த நிறுவனம்

    இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி ஒரே மாதத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி அக்டோபர் மாதத்தில் மட்டும் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. சியோமி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான லெய் ஜூன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இந்த தகவலை அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

    சீனாவின் வெய்போ தளத்தில் புதிய சாதனையை லெய் ஜூன் தெரிவித்திருந்தார். இந்த பதிவுடன் சியோமி Mi 5X ஸ்மார்ட்போனின் டீசர் புகைப்படமும் பதிவிடப்பட்டுள்ளது. இதே தகவலை சியோமி இந்திய தலைவர் மனு குமார் ஜெயின் தனது டுவிட்டரில் தொடர்ச்சியாக இரண்டு மாதங்களில் ஒரு கோடிக்கும் அதிகமான ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்திருக்கிறோம் என தெரிவித்திருந்தார்.

    முன்னதாக திபாவளி பண்டிகை காலத்தில் மட்டும் சியோமி நிறுவனம் 40 லட்சத்திற்கும் அதிகமான ஸ்மார்ட்போன்களை ஒரே மாதத்தில் விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது. அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளங்களை தொடர்ந்து இந்தியாவில் முன்னணி ஸ்மார்ட்போன் விற்பனை தளமாக சியோமியின் Mi.Com இருந்தது.



    இந்தியாவில் 2014-ஜூன் மாதத்தில் களமிறங்கிய சியோமி நிறுவனம் ஒன்பிளஸ், ஒப்போ மற்றும் விவோ போன்ற சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் மட்டுமின்றி ஆப்பிள், சாம்சங் மற்றும் சோனி போன்ற நிறுவனங்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது. சர்வதேச சந்தையில் டாப் 5 இடங்களில் ஏற்கனவே இடம்பிடித்துள்ள சியோமி கூகுளுடன் இணைந்து ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன்களை வெளியிட இருக்கிறது.   

    பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவது சியோமியின் விற்பனை அதிகரிக்க காரணமாக அமைகிறது. முன்னதாக அந்நிறுவனம் 9 கோடி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சியோமி 22 சதவிகித பங்குகளை பெற்றுள்ளது. இதனால் சாம்சங் நிறுவனத்தை தொடர்ந்து இந்தியாவில் இரண்டாவது இடத்தில் சியோமி உள்ளது.
    Next Story
    ×