search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிகப்படியான எமோஜிக்கள் நிறைந்த ஐ.ஓ.எஸ். 11.1 அப்டேட் வெளியிடப்பட்டது
    X

    அதிகப்படியான எமோஜிக்கள் நிறைந்த ஐ.ஓ.எஸ். 11.1 அப்டேட் வெளியிடப்பட்டது

    ஆப்பிள் நிறுவனம் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஐ.ஓ.எஸ். 11.1 அப்டேட் வெளியிட்டுள்ளது. புதிய அப்டேட்டில் வழங்கப்பட்டுள்ள புதிய அம்சங்கள் சார்ந்த முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    ஆப்பிள் ஐ.ஓ.எஸ். 11.1 அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. புதிய அப்டேட்ட ஐபோன், ஐபேட் மற்றும் ஐபாட் டச் உள்ளிட்ட சாதனங்களில் வழங்கப்படுகிறது. அதிகப்படியான் புதிய எமோஜிக்கள் மற்றும் 3D டச் ஆப் ஸ்விட்ச் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் வாட்ச்ஓ.எஸ். 4.1 மற்றும் டி.வி.ஓ.எஸ். 11.1 அப்டேட்களும் வெளியிடப்பட்டுள்ளது.

    புதிய ஐ.ஓ.எஸ். 11.1 அப்டேட் ஐபோன் 5S மற்றும் அதன்பின் வெளியிடப்பட்ட ஐபோன், ஐபேட் ஏர், ஐபேட் மினி 2, ஐபாட் டச் மற்றும் அதன்பின் வெளியிடப்பட்ட சாதனங்களில் டவுன்லோடு செய்ய முடியும். புதிய இயங்குதளத்தை டவுன்லோடு செய்ய செட்டிங்ஸ் -- ஜெனரல் -- சாஃப்ட்வேர் அப்டேட் ஆப்ஷன்களை கிளிக் செய்ய வேண்டும்.

    புதிய இயங்குதளத்தை அப்டேட் செய்யும் முன் சாதனம் வைபை இணைப்பு பெற்றிருப்பதோடு, தகவல்கள் அனைத்தும் பேக்கப் செய்யப்பட்டு போதுமான அளவு சார்ஜ் செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.



    புதிய ஐ.ஓ.எஸ். 11.1 அப்டேட்டில் உணவு வகைகள், விலங்குகள், விசித்திர உருவங்கள் மற்றும் ஆடை வடிவங்கள் என மொத்தம் 70க்கும் அதிகமான புதிய எமோஜிக்கள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் டால்பின்கள், தேனீ போன்றவையும் ஒட்டுமொத்த மெசேஜிங் அனுபவத்தை மாற்றியமைக்கும் வகையில் உள்ளது.

    புதிய எமோஜிக்களுடன் அப்டேட்டில் போட்டோஸ் மற்றும் வாய்ஸ் ஓவர்களில் மேம்படுத்தல்கள் மற்றும் பிழை சரி செய்யப்பட்டுள்ளது. இந்த அப்டேட்டுடன் 3D டச் மூலம் ஆப் ஸ்விட்ச்சர் அம்சம் வழங்கப்படுகிறது. இதனால் 3D டச் டிஸ்ப்ளேவின் ஓரத்தில் அழுத்தி பிடித்து மல்டி டாஸ்கிங் ஆப் ஸ்விட்ச்சர் இன்டர்ஃபேஸ் இயக்க முடியும்.

    இந்த அப்டேட்டுடன் அதிகப்படியான பாதுகாப்பு மேம்படுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இதில் அதிகம் கூறப்பட்ட WPA2 வைபை ப்ரோடோகால் பிழை சரி செய்யப்பட்டுள்ளது. 
    Next Story
    ×