search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    யு டெலிவென்ச்சர்ஸ் நிறுவனத்தின் யு யுரெகா 2 ஸ்மார்ட்போன் அறிமுகம்
    X

    யு டெலிவென்ச்சர்ஸ் நிறுவனத்தின் யு யுரெகா 2 ஸ்மார்ட்போன் அறிமுகம்

    யு டெலிவென்ச்சர்ஸ் நிறுவனத்தின் யுரெகா 2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் விற்பனை சார்ந்த தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் யு டெலிவென்ச்சர்ஸ் இந்தியாவில் யு யுரெகா 2 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. 5.5 இன்ச் 1080 பிக்சல், 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 625 சிப்செட் மற்றும் 4 ஜிபி ரேம் கொண்டிருக்கிறது. 16 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா மற்றும் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம் கொண்டு இயங்குகிறது.

    யுனிபாடி மெட்டல் வடிவமைப்பு, கைரேகை ஸ்கேனர், மற்றும் 3930 எம்ஏஎச் பேட்டரி, குவிக் சார்ஜ் 3.0 வசதி கொண்டுள்ள யு யுரெகா 2 ஸ்மார்ட்போன் கோல்டு நிறத்தில் வெளியிடப்பட்டுள்ளது.



    யு யுரெகா 2 சிறப்பம்சங்கள்:

    - 5.5 இன்ச் 1920x1080 பிக்சல் ஃபுல் எச்டி 2.5D வளைந்த் கிளாஸ் டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 625 பிராசஸர்
    - அட்ரினோ 506 GPU
    - 4 ஜிபி ரேம்
    - 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 6.0.1 மார்ஷ்மல்லோ
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - 16 எம்பி பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்இடி பிளாஷ்
    - 8 எம்பி செல்ஃபி கேமரா
    - கைரேகை ஸ்கேனர்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3930 எம்ஏஎச் பேட்டரி, குவிக் சார்ஜ் 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங்

    யு யுரெகா 2 ஸ்மார்ட்போன் விலை இந்தியாவில் ரூ.11,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படும் யுயுரெகா 2 விற்பனை செப்டம்பர் 20-ம் தேதி துவங்குகிறது.
    Next Story
    ×