என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவில் ஐபோன்களின் விலை அதிரடி தள்ளுபடி
    X

    இந்தியாவில் ஐபோன்களின் விலை அதிரடி தள்ளுபடி

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 2017 வெளியீடு விரைவில் நடைபெற இருக்கும் நிலையில், ஏற்கனவே இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஐபோன்களின் விலை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:  

    ஆப்பிள் நிறுவனத்தின் 2017 ஐபோன் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது. சமீபத்தில் வெளியாகியுள்ள தகவல்களில் புதிய ஐபோன் செப்டம்பர் 12-ம் தேதி வெளியிடப்படும் என கூறப்படுகிறது. இதுவரை ஆப்பிள் நிறுவனம் சார்பில் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படாத நிலையில், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஐபோன்களின் விலையில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி பேடிஎம் தளத்தில் ஐபோன் 7, ஐபோன் 6S, ஐபோன் 6 போன்ற மாடல்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ரூ.72,000க்கு விற்பனை செய்யப்பட்ட ஐபோன் 7 பிளஸ் 32 ஜிபி மாடல் தற்சமயம் ரூ.51,399 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் சில்வர் நிற ஐபோன் மாடல் ரூ.51,370 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    ஐபோன் 7 பிளஸ் 128 ஜிபி (கோல்டு) ரூ.82,000-இல் இருந்து தற்சமயம் ரூ.57,599 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பிளாக் நிற ஐபோன் 7 பிளஸ் 256 ஜிபி மாடல் தள்ளுபடி செய்யப்பட்டு தற்சமயம் ரூ.68,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.



    ஐபோன் 7:

    இந்தியாவில் ஐபோன் 7 விலை ரூ.47,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 128 ஜிபி ஐபோன் 7 எட்டு சதவிகித தள்ளுபடி மற்றும் ரூ.12,000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. 32 ஜிபி மெமரி கொண்ட ஐபோன் 7 ரோஸ் கோல்டு மாடல் 13 சதவிகித தள்ளுபடி மற்றும் ரூ.9,100 கேஷ்பேக் சேர்த்து தற்சமயம் ரூ.39,599 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ரூ.80,000 விலையில் விற்பனை செய்யப்படும் ஐபோன் 24 சதவிகிதம் தள்ளுபடி மற்றும் ரூ.10,500 தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.60,898 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 

    ஐபோன் 6S பிளஸ்:

    ஆப்பிள் ஐபோன் 6S பிளஸ் 16 ஜிபி சில்வர் நிற மாடல் ரூ.72,000க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையி்ல் தற்சமயம் தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.37,299க்கு விற்பனை செய்யப்படுகிறது. ப்ரோமோ கூப்பன் கொண்டு வாங்கும் போது ரூ.5,000 கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதேபோல் ஐபோன் 6S பிளஸ் 16 ஜிபி கோல்டு நிற மாடல் ரூ.38,299க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் உண்மை விலை ரூ.72,000 ஆகும்.



    ஐபோன் 6S பிளஸ் 16 ஜிபி ஸ்பேஸ் கிரே நிற மாடல் தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.40,990க்கு விற்பனை செய்யப்படுகிறது. பேடிஎம் தளத்தில் இந்த மாடல் 36 சதவிகிதம் தள்ளுபடி மற்றும் ரூ.5,000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதே மாடலின் கோல்டு நிற பதிப்பு ரூ.38,299 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் உண்மையான விலை ரூ.72,000 ஆகும்.



    ஐபோன் 6S:

    பேடிஎம் தளத்தில் ஐபோன் 6S 16 ஜிபி கோல்டு, ஸ்பேஸ் கிரே மற்றும் சில்வர் நிற மாடல்கள் ரூ.55,300 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 5 சதவிகிதம் தள்ளுபடி மற்றும் ரூ.3,700 கேஷ்பேக் பெறும் இந்த மாடலின் உண்மை விலை ரூ.62,000 ஆகும்.

    ஐபோன் SE:

    2 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட ஐபோன் SE தற்சமயம் ரூ.20,000 விலை விற்பனை செய்யப்படுகிறது. இதன் உண்மை விலை ரூ.39,000 என்ற நிலையில் 42 சதவிகித தள்ளுபடி மற்றும் ரூ.2,200 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
    Next Story
    ×