என் மலர்

  செய்திகள்

  ஸ்மார்ட்போன் தொலைந்ததும் முதலில் செய்ய வேண்டியவை
  X

  ஸ்மார்ட்போன் தொலைந்ததும் முதலில் செய்ய வேண்டியவை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஸ்மார்ட்போன் இன்றி சில நொடிகளும் இருக்க முடியாது என்ற நிலையில், அது தொலைத்து விட்டால் என்ன செய்வது என்பனவற்றை தொடர்ந்து பார்ப்போம்.
  புதுடெல்லி:

  ஆசை ஆசையாய் வாங்கிய ஸ்மார்ட்போன், ஏதோ ஞாபகத்தில் எங்கேயோ வைத்து தொலைந்து விட்டதா? எந்நேரமும் கையில் இருந்தாலும், நாம் அசைந்த சில நொடிகளில் ஸ்மார்ட்போன் மாயமாகி இருக்கலாம். இவ்வாறு ஏதோ காரணத்தால் களவாடப்பட்ட ஸ்மார்ட்போனினை கையும், களவுமாக பிடிப்பது கடினமான காரியமாக இருந்தாலும் உங்களது தகவல்களை கச்சிதமாக காப்பாற்ற முடியும்.   

  ஸ்மார்ட்போன் தொலைந்து போனதும் அதிக பதற்றம் கொள்ளாமல் நிதானமாக செயல்பட்டு அதனை கண்டுபிடிக்க முடியுமா என்பதை யோசிக்க வேண்டும். இங்கு ஸ்மார்ட்போன் தொலைந்ததும் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம். 

  உடனடி நடவடிக்கை:

  ஸ்மார்ட்போன் தொலைந்ததும், அது பயன்படுத்த உகந்ததாக இருக்கும். இதனால் ஸ்மார்ட்போன் தொலைந்ததும், உடனடியாக உங்களது மொபைல் ஆப்பரேட்டரை தொடர்பு கொண்டு சிம் இணைப்பை துண்டிக்க வேண்டும். இவ்வாறு செய்வது உங்களது சிம் கார்டினை தீங்கு விளைவிக்கும் செயல்களுக்கு பயன்படுத்துவதை தவிர்க்க முடியும்.     அடுத்து உங்களது போனின் IMEI நம்பர் தெரிந்து வைத்திருந்தால் போனினை பிளாக் செய்யலாம். இந்த நம்பர் ஒவ்வொரு ஸ்மார்ட்போனிற்கும் பிரத்தியேகமாக வழங்கப்படும் பாதுகாப்பு எண் போன்றதாகும். இதனால் ஸ்மார்ட்போன் வாங்கியதும் இதனை குறித்து வைத்துக் கொள்வது நல்லது. மேலும் IMEI நம்பரை அறிந்து கொள்ள ஸ்மார்ட்போனில் இருந்து "*#06#" குறியீட்டையும் பயன்படுத்தலாம். 

  புகார் அளிக்க வேண்டும்:

  உங்களது ஸ்மார்ட்போன் தொலைந்து விட்டதை காவல் துறையில் புகார் அளிக்க வேண்டும், இத்துடன் போனின் IMEI நம்பரையும் வழங்க வேண்டும். இவ்வாறு புகார் அளித்ததும் நெட்வொர்க் மற்றும் ஸ்மார்ட்போன்களை பிளாக் செய்ய வழி செய்யும், மேலும் ஸ்மார்ட்போன் இன்சூரன்ஸ் செய்யப்பட்டிருப்பின் இன்சூரன்ஸ் தொகையை பெற வழி செய்யும்.  பாஸ்வேர்டுகளை மாற்றவும்:

  இன்றைய ஸ்மார்ட்போன்கள் அழைப்புகளையும் கடந்து மின்னஞ்சல், சமூக வலைத்தளம், ஷாப்பிங் மற்றும் பேங்கிங் சேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. தொழில்நுட்பம் நன்கு அறிந்த திருடர்கள் எனில் உங்களது ஆன்லைன் கணக்குகளும் தவறுதலாக பயன்படுத்தப்படலாம். இதனால் ஸ்மார்ட்போன் தொலைந்ததும் பாதுகாப்பு காரணங்களுக்காக பாஸ்வேர்டுகளை மாற்றிட வேண்டும். 

  முன்னெச்சரிக்கை நடவடிக்கை:

  ஸ்மார்ட்போன் தொலைவதற்கு முன் அதில் பாஸ்வேர்டு, ஜெஸ்ட்யூர் மற்றும் கைரேகை ஸ்கேனர் உள்ளிட்டவை கொண்டு லாக் செய்திருக்க வேண்டும். பாஸ்வேர்டினை மிகவும் எளிமையாகவும், அதிகம் பயன்படுத்தக் கூடியதாகவும் இருப்பின் அவற்றை கடினமானதாக மாற்ற வேண்டும். 

  தொலைந்து போன ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை கண்டறிய, போன் தொலையும் முன்னரே ஸ்மார்ட்போனின் கூகுள் செட்டிங்-ஐ செயல்படுத்த வேண்டும். மேலும் லொகேஷன் ரிபோர்டிங் ஆப்ஷன் (Location Reporting) அதிகமாக செட் செய்யப்பட்டுள்ளதா என்பதையும் சரி பார்க்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது சாதனத்தை கண்டறிவது எளிமையாகி விடும்.   ஆன்லைன் சின்க்கிங்:

  உங்களது தகவல்கள் பாதுகாப்பாக இருக்க, அவற்றை ஆன்லைன் ஸ்டோரேஜில் சின்க் செய்திருக்க வேண்டும். ஆன்லைனில் உங்களது கான்டாக்ட், போட்டோஸ் மற்றும் பல்வேறு தரவுகளை சின்க் செய்ய முடியும்.
  Next Story
  ×