என் மலர்

  செய்திகள்

  அசத்தல் விலையில் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட இன்டெக்ஸ் அக்வா எஸ் 3
  X

  அசத்தல் விலையில் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட இன்டெக்ஸ் அக்வா எஸ் 3

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இன்டெக்ஸ் நிறுவனத்தின் அக்வா எஸ் 3 எனும் புதிய ஸ்மார்ட்போன் சீன நிறுவனங்களுக்கு போட்டியளிக்கும் விலையில், அசத்தல் சிறப்பம்சங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது. புதிய அக்வா எஸ் 3 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் விலையை பார்ப்போம்.
  புதுடெல்லி:

  இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் சாதனங்களின் வரவு அதிகரித்து வந்தாலும், பல்வேறு நிறுவனங்கள் விலையை காட்டிலும் சிறப்பம்சங்களில் அதிக கவனம் செலுத்தத் துவங்கியுள்ளன. மலிவு விலையில் அதிக அம்சங்களை வழங்கி வரும் சீன நிறுவனங்களின் போக்கு மற்ற நிறுவனங்களையும் போட்டியிட செய்துள்ளது. 

  சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி ரெட்மி 4ஏ, ரெட்மி 4 மற்றும் மோட்டோரோலாவின் மோட்டோ சி உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் குறைந்த விலையில் அதிக அம்சங்களை கொண்டுள்ளன. அந்த வகையில் வெளிநாட்டு நிறுவனங்களுடன் போட்டியிடும் வகையில் இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனமான இன்டெக்ஸ் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. 

  பட்ஜெட் விலையில் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட ஸ்மார்ட்போனாக இன்டெக்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் அமைந்துள்ளது. அந்த வகையில் புதிய இன்டெக்ஸ் அக்வா எஸ் 3 ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம், டோஸ் பவர் சேவிங் மோட் உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது.  இன்டெக்ஸ் அக்வா எஸ் 3 சிறப்பம்சங்கள்:

  * 5.0 இன்ச் எச்டி ஐ.பி.எஸ். டிஸ்ப்ளே
  * 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் சிப்செட்
  * 2 ஜிபி ரேம்
  * 8 ஜிபி இன்டெர்னல் மெமரி
  * 8 எம்பி பிரைமரி கேமரா
  * 5 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி பிளாஷ்
  * 2450 எம்ஏஎச் பேட்டரி
  * 4ஜி வோல்ட்இ 
  * மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

  இத்துடன் இன்டெக்ஸ் அக்வா எஸ் 3 ஸ்மார்ட்போனில் miFon செக்யூரிட்டி அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இதில் வாடிக்கையாளர்களுக்கு ஒன்பது பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்படுகிறது. அதாவது ஸ்மார்ட்போனில் மொபைல் டேட்டா இல்லாத நிலையில் தொலைந்து போனாலும் எளிதாக கண்டுபிடிக்கும் வசதி இடம்பெற்றுள்ளது. 

  மேலும் ஆண்டிவைரஸ், டேட்டா பேக்கப், திருடுபவரை செல்ஃபி எடுத்து ஸ்மார்ட்போன் வைத்திருப்பவருக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பும் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் புதிய இன்டெக்ஸ் அக்வா எஸ் 3 ஸ்மார்ட்போன் ரூ.5,777 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 
  Next Story
  ×