search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவில் ரூ.10,000 விலை குறைக்கப்பட்ட ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்
    X

    இந்தியாவில் ரூ.10,000 விலை குறைக்கப்பட்ட ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்

    இந்தியாவில் இருபதாவது ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக தென் கொரிய ஸ்மார்ட்போன் நிறுவனம் தனது ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனின் விலையில் ரூ.10,000 வரை குறைத்துள்ளது. ஆனால் இந்த சலுகை உண்மையில் நமக்கு உபயோகமானதா?
    புதுடெல்லி:    

    தென் கொரியாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனமான எல்ஜி இந்தியாவில் இருபதாவது ஆண்டு விழா சலுகையாக தனத சமீபத்திய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனின் விலையை குறைத்துள்ளது. இந்தியாவில் ரூ.55,000க்கு வெளியிடப்பட்ட எல்ஜி ஜி6 ஸ்மார்ட்போனின் விலை தற்சமயம் ரூ.45,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது.    

    இந்தியாவில் ரூ.10,000 விலை குறைக்கப்பட்ட போதும், நமக்கு இந்த சலுகை தேவையற்றதகவே உள்ளது. பிரபல ஆன்லைன் விற்பனை தளமான அமேசானில் எல்ஜி ஜி6 ஸ்மார்ட்போன் ரூ.41,999 என விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகையாக ரிலையன்ஸ் ஜியோவின் 100 ஜிபி அளவு 4ஜி டேட்டா, டோன் ஆக்டிவ்+ HBS A100 ப்ளூடூத் ஹெட்செட் உள்ளிட்டவற்றை வழங்குகிறது.  



    சிறப்பம்சங்களை பொருத்த வரை மெட்டல் வடிவமைப்பு கொண்ட எல்ஜி ஜி6 ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம், 5.7 இன்ச் ஃபுல் விஷன் 1440x2880 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே மற்றும் டால்பி விஷன் வியூவிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. கூகுள் அசிஸ்டண்ட் சேவை வழங்கப்பட்டுள்ள எல்ஜி ஜி6 குவால்காம் ஸ்னாப்டிராகன் 821 சிப்செட் மற்றும் 4 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. 

    மெமரியை பொருத்த வரை 64 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 13 எம்பி டூயல் பிரைமரி கேமரா அமைப்பு, ஆட்டோஃபோகஸ், எல்இடி பிளாஷ் மற்றும் 4K ரெசல்யூஷனில் வீடியோ பதிவு செய்யும் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. 3300 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படும் எல்ஜி ஜி6 ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×