search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    மோட்டோரோலா சிறப்பு விற்பனை: இது பிளிப்கார்ட்டில் மட்டும்
    X

    மோட்டோரோலா சிறப்பு விற்பனை: இது பிளிப்கார்ட்டில் மட்டும்

    இந்தியாவில் மோட்டோரோலா பொருட்கள் விற்பனையின் மூன்றாம் ஆண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் மோட்டோ சாதனங்களின் மூன்றாம் ஆண்டு விழாவை முன்னிட்டு பிளிப்கார்ட் தளத்தில் மோட்டோரோலா சாதனங்களுக்கு சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. மோட்டோ டேஸ் ஆஃபர்ஸ் என்ற பெயரில் இரண்டு நாட்களுக்கு விற்பனை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 20 மற்றும் பிப்ரவரி 21 ஆம் தேதி இந்த விற்பனை நடைபெற இருக்கிறது. 

    சிறப்பு தள்ளுபடி விற்பனையில் மோட்டோ Z மற்றும் மோட்டோ Z பிளே ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.2000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்து ரூ.20,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் மோட்டோ ஜி டர்போ மற்றும் மோட்டோ M ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.1,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

    இத்துடன் இண்டஸ்இன்ட் வங்கி கிரெடிட் கார்டு மூலம் மோட்டோ சாதனங்களை வாங்குவோருக்கு 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதே விற்பனையில் மோட்டோரோலா தயாரித்த நெக்சஸ் 6 ஸ்மார்ட்போன்களும் தள்ளுபடி செய்யப்பட்ட சிறப்பு விலையில் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    அதன் படி 32 ஜிபி ரூ.19,999க்கும் 64 ஜிபி ரூ.25,999 விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதே போல் 16ஜிபி மோட்டோ ஜி2 ரூ.6,999 விலையிலும் 8ஜிபி மோட்டோ ஜி3 ரூ.7,999 விலையில் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மோட்டோ E பவர் ரூ.500 தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.7,499க்கும், 3ஜி வசதி கொண்ட மோட்டோ E2 ரூ.4,999 விலைக்கும் 4ஜி மாடல் ரூ.5,999க்கும் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
    Next Story
    ×