search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூ.16க்கு அன்லிமிட்டெட் 3ஜி / 4ஜி டேட்டா: வோடபோன் அதிரடி திட்டம்
    X

    ரூ.16க்கு அன்லிமிட்டெட் 3ஜி / 4ஜி டேட்டா: வோடபோன் அதிரடி திட்டம்

    ரிலையன்ஸ் ஜியோவுடனான போட்டியை பலப்படுத்த புதிய சலுகை ஒன்றை வோடபோன் அறிவித்துள்ளது. அதன் படி வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் டேட்டா மிக குறைந்த விலையில் வழங்கப்படுகிறது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் முன்னணி டெலிகாம் நிறுவனமான வோடபோன் சூப்பர் ஹவர் (SuperHour) என்ற பெயரில் புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் 3ஜி அல்லது 4ஜி டேட்டா ரூ.16 என்ற விலையில் வழங்கப்படுகிறது. இதே போல் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்களும் (வோடபோன் எண்களுக்கு மட்டும்) ரூ.7 என்ற விலைக்கு வழங்கப்படுகிறது. 

    வோடபோன் அறிவித்துள்ள இந்த திட்டங்களுக்கு ஒரு மணி நேர வேலிடிட்டி வழங்கப்பட்டுள்ளது. சூப்பர் ஹவர் திட்டத்தின் மூலம் ஒரு மணி நேரத்தில் எல்லையில்லா டேட்டாவினை பயன்படுத்த முடியும். இச்சலுகை மூலம் அதிகளவு டவுன்லோடு, சர்ஃபிங் உள்ளிட்டவற்றை பயன்படுத்த முடியும். வாடிக்கையாளர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் சூப்பர் ஹவர் திட்டத்தை பயன்படுத்த முடியும் என வோடபோன் நிறுவனத்தின் வணிக பிரிவு தலைவர் சந்தீப் கட்டாரியா தெரிவித்துள்ளார்.         

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'வாடிக்கையாளர்கள் சூப்பர் ஹவர் திட்டத்தை பயன்படுத்தி அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்களை ரூ.7க்கு மேற்கொள்ள முடியும்', என குறிப்பிடப்பட்டுள்ளது. 

    வோடபோன் புதிய திட்டத்தின் மூலம் பிரீபெயிட் வாடிக்கையாளர்கள் அன்லிமிட்டெட் 4ஜி / 3ஜி டேட்டாவினை ஒரு மணி நேரத்திற்கு பெற முடியும், ரூ.16க்கு வழங்கப்படும் இந்த சலுகை முதற்கட்டமாக ஜனவரி 7 ஆம் தேதி முதல் தேர்வு செய்யப்பட்ட சில வட்டாரங்களை சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். அனைத்து வட்டாரங்களை சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு ஜனவரி 9 ஆம் தேதி முதல் இந்த சலுகை கிடைக்கும் என்றும் சில வட்டாரங்களில் இவற்றின் விலை மாறுபடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    வோடபோன் பிளே சேவையை மார்ச் 31, 2017 வரை இலவசமாக பயன்படுத்துவோருக்கு, இந்த சலுகையின் மூலம் அன்லிமிட்டெட் டேட்டா சலுகையை கொண்டு வோடபோன் பிளே மூலம் வீடியோ மற்றும் திரைப்படங்களை பார்க்க முடியும்.
    Next Story
    ×