search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உங்கள் அருகாமையில் பணம் இருக்கும் ஏடிஎம்களை அறிந்து கொள்ள ஃபேஸ்புக் மெசேஞ்சர் போதும்
    X

    உங்கள் அருகாமையில் பணம் இருக்கும் ஏடிஎம்களை அறிந்து கொள்ள ஃபேஸ்புக் மெசேஞ்சர் போதும்

    நம் தேவைக்கு பணம் எடுக்க அருகாமையில் இருக்கும் ஏடிஎம்களின் தகவல்களை அறிந்து கொள்ள ஃபேஸ்புக் மெசேஞ்சரை எப்படி பயன்படுத்தலாம் என்பதை பார்ப்போம்.
    சென்னை: 

    இந்தியாவில் பண தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் பலரும் வங்கி மற்றும் ஏடிஎம் மையங்களில் கால் வலிக்க நின்று அதன் பின் ஏடிஎம்களிலும் பணம் இருந்தால் மட்டுமே காசு எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்களுக்கு உதவும் நோக்கில் சில இணையத்தளங்கள் களத்தில் இறங்கியுள்ளன. இவற்றை பயன்படுத்தி பணம் இருக்கும் ஏடிஎம்களின் தகவல்களை பெற முடியும். 

    இந்நிலையில் இணையத்தளங்களுடன் சேர்ந்து ஃபேஸ்புக் மெசேஞ்சர் செயலியும் பணம் இருக்கும் ஏடிஎம் மையங்களை அறிந்து கொள்ள உதவுகிறது. அதன் படி தமிழ் நாட்டை சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் சாட்போட் (Chatbot) ஒன்றை உருவாக்கியுள்ளது. இதை பயன்படுத்தி மெசேஞ்சர் செயலியிலேயே பணம் இருக்கும் ஏடிஎம் மையங்கள் சார்ந்த தகவல்களை பெற முடியும். இதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை பார்ப்போம்..

    முதலில் மெசேஞ்சர் செயலியை திறந்து தேடுபொறியில் "ATMBOT" என டைப் செய்யுங்கள். இவ்வாறு டைப் செய்ததும் நீல நிற ரோபோட்டின் ப்ரோஃபைல் திறக்கும். 

    ப்ரோஃபைலை கிளிக் செய்ததும் ஏடிஎம்பாட் ஆப்ஷனின் சாட்பாக்ஸ் திறக்கும், இங்கு "send location" என்ற ஆப்ஷனும் காணப்படும். இப்போது போனின் GPS ஆன் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். பின் "send location" ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.

    நீங்கள் இருக்கும் இடத்தை அனுப்பியதும், சாட்போட் உங்களுக்கு இரண்டு ஆப்ஷன்களை கேள்விகளாக வழங்கும். ஒன்றில் தகவல் அளிப்பது மற்றொன்றில் தகவல்களை பெறுவது. இங்கு உங்களுக்கு தேவையான தகவல்களை சாட்பாட் வழங்கி இருக்கும் ஆப்ஷன்களை கிளிக் செய்து அனுப்ப வேண்டும். 

    முந்தைய ஆப்ஷன் மூலம் நீங்கள் தேர்வு செய்த பதில் அளித்ததும் உங்களுக்கு அருகாமையில், பணம் இருக்கும் ஏடிஎம்களின் முகவரி மெசேஞ்சர் திரையில் வழங்கப்பட்டு விடும். இங்கு பணம் இருக்கும் ஏடிஎம் சார்ந்த தகவல்களை பார்க்க முடியும். மேலும் ஏடிஎம் மையங்கள் சார்ந்த தகவல்களையும் நீங்கள் வழங்க முடியும். 
    Next Story
    ×