என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    விஜய் கரூர் செல்வதற்கு போலீசின் அனுமதி எதற்கு?- அண்ணாமலை
    X

    விஜய் கரூர் செல்வதற்கு போலீசின் அனுமதி எதற்கு?- அண்ணாமலை

    • கரூரில் என்ன பூதமா உள்ளது? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
    • கரூரில் விஜய் உயிருக்கு ஆபத்து உள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.

    தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர்,"கரூரில் என்ன பூதமா உள்ளது" என கேள்வி எழுப்பினார்.

    கரூரில் விஜய் உயிருக்க ஆபத்து உள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறிய நிலையில் அண்ணாமலை இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    விஜய் கரூர் வருவதற்கு போலீசின் அனுமதி எதற்கு? யார் வேண்டுமானாலும் கரூர் வரலாம். கரூர் மக்கள் ரொம்ப அன்பானவர்கள். கரூரில் என்ன பூதமா உள்ளது

    அதிமுகவும்- தவெகவும் வெவ்வேறு பாதையில் உள்ள கட்சிகள், பொறுத்திருந்து பார்ப்போம். விசிகவினர் திருமாவளவன் கண்முன்னரே ஒருவரை அடித்ததற்கு இதுவரை ஒரு எப்ஐஆர் கூட பதியப்படவில்லை.

    விசிக தொண்டர்கள் நடந்து கொள்ளும் விதத்திற்கு திருமாவளவன் தான் பொறுப்பு. ஆதவ் அர்ஜூனாவை கட்சியை விட்டு அனுப்பிவிட்டு ஏன் இன்னும் திருமாவளவன் அவருடன் நட்பு பாராட்டுகிறார்?

    ஆதவ் அர்ஜூனாவை தவெகவுக்கு அனுப்பி வைத்துவிட்டு திருமாவளவன் பாஜக மீது குறை கூறுவதா? கோவையில் பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயர் வைத்தததை வரவேற்கிறோம்.

    ஆனால், எம்ஜிஆர், இரட்டைமலை சீனிவாசன் உள்ளிட்ட தலைவர்களின் பெயர்களை ஏன் வைக்கவில்லை?

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×