Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்...

தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்...

போராடுவோரை கைது செய்வது நீட் விஷயத்தில் ஆளுங்கட்சியின் இரட்டை நிலைப்பாட்டை காட்டுகிறது - உதயநிதி

* ‘நீட்’ தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றம் நோக்கி செல்ல முயன்ற மாணவர்கள் மீது போலீசார் தடியடி

* மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்.

தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது! - அமைச்சர் ஆதவ் அர்ஜூனா

* தமிழகத்தின் எதிர்ப்புக் குரலை இன்றைக்கு ஒட்டுமொத்த இந்தியாவும் எதிரொலிக்கிறது.

* மாணவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, ஒன்றிய அரசு உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.

நீட் தேர்வை ரத்து செய்வது மட்டுமே அனைத்திற்கும் நிரந்தர தீர்வை அளிக்கும் - மு.க.ஸ்டாலின்

* நீட் பெரிய அளவிலான முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

* திமுக ஆரம்பத்திலிருந்தே நீட் தேர்வை எதிர்த்து வருகிறது.

GOLD PRICE TODAY: ராக்கெட் வேகத்தில் எகிறிய தங்கம் விலை! - எவ்வளவு தெரியுமா?

* சர்வதேச பொருளாதார சூழல், போர் பதற்றம் காரணமாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது.

* தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது.

நாகர்கோவில் சிறையில் மரணமடைந்த சபரிவர்மன் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

* கைது செய்யப்பட்ட சிறைக் காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

* சிறை கைதிகள் 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

அமெரிக்காவில் ஜெனரிக் மருந்துகளுக்கு 2 ஆண்டுகள் வரிவிலக்கு: டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு!...

"அமெரிக்காவிற்குள்ளேயே ஜெனரிக் மருந்துகளின் உற்பத்தியை மீண்டும் கொண்டுவருவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் ராகுல் காந்தி கைது-நீட் தேர்வுப் பிரச்சனை: ஒன்றிய அரசுக்கு எதிராக தவெக கடும் கண்டனம்!...

"நீட் தேர்வால் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் பாதிப்பிற்குள்ளாவது நின்றபாடில்லை."

சர்வதேச கிரிக்கெட் ஓய்வுக்குப் பின் புதிய அத்தியாயம்: டர்ஹாம் அணிக்காக அபார சதமடித்து பென் ஸ்டோக்ஸ் சாதனை!...

ஆட்டத்தின் இடையே தசைப்பிடிப்பு ஏற்பட்ட போதிலும், கடைசி வரை களத்தில் நின்றார்.

கீழடி 11-ஆம் கட்ட அகழாய்வு: புதிய தொழிற்கூடம் மற்றும் நீர் மேலாண்மை அமைப்புகள் கண்டுபிடிப்பு!...

நடப்பு அகழாய்வுப் பருவத்தின் முதல் நான்கு மாதங்களிலேயே 1,300-க்கும் மேற்பட்ட அபூர்வத் தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் தீவிரமடையும் காட்டுத் தீ: பிளசண்டன் பகுதியில் 950 ஏக்கர் சாம்பல்; மக்கள் வெளியேற்ற உத்தரவு!...

சுமார் 4,900-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

'ஈரான் போரில் 18 பேர் மட்டுமே பலி': முந்தைய போர்களுடன் ஒப்பிட்டு டிரம்ப் பதிவு!...

டிரம்பின் இந்தப் பதிவுக்கு எதிர்க்கட்சியினரும் மனித உரிமை அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

தொடரும் தென் மாவட்ட கனிமக் கொள்ளையை தடுக்க வேண்டும் - சிபிஐ விசாரணை தேவை!- அன்புமணி வலியுறுத்தல்

எந்த அளவுக்கு கனிமக் கொள்ளை நடந்திருக்கிறது என்பதைக் கண்டறிந்து அதை கனிமக் கொள்ளையர்களிடம் இருந்து வசூலிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.

பழனி கோவில் நிலம் மோசடி விவகாரம்- அ.தி.மு.க ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

* மடத்திற்குச் சொந்தமான நிலத்தை, தனியாருக்கு பத்திரப் பதிவு செய்து கொடுத்ததன் மர்மம் விளங்கவில்லை.

* நிலத்தை விற்பதற்கான பத்திரம் தயாரித்து, விற்பனைப் பத்திரத்தில் கையெழுத்திட்ட நபர்கள் மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

திருப்பதியில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு- நேர ஒதுக்கீடு தரிசன டிக்கெட் விநியோகம் ரத்து

* தரிசன டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டது தெரியாமல் ஏராளமான பக்தர்கள் டிக்கெட் வழங்கும் மையங்களில் நேற்று இரவு முதல் விடிய, விடிய காத்திருந்தனர்.

* நாளை மறுநாள் தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் நாளை வழக்கம்போல் வழங்கப்படும்.

விஜய் சொன்னதை செய்தால் தான் மக்கள் ‘ஹீரோ’வாக பார்ப்பார்கள்- பிரேமலதா

* தே.மு.தி.க. சார்பில் ஆகஸ்ட் 1-ந் தேதி ஒகேனக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

* விவசாயிகளை காக்க தமிழக அரசு விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யவேண்டும்.

அரிசி விலை கிடுகிடு உயர்வு- பொன்னி அரிசி கிலோ ரூ.80-க்கு விற்பனை

* நாட்டில் பரவலாக ஏற்பட்டுள்ள வறட்சி, நெல் உற்பத்தியை வெகுவாக பாதித்துவிட்டது.

*கர்நாடக மாநிலத்தில் விளைச்சல் குறைந்ததால் ஏற்பட்டுள்ள இந்த விலையேற்றம் கவலை தருவதாக உள்ளது.

தமிழகத்தை குப்பைத் தொட்டியாக்கும் கேரளம்- டிடிவி தினகரன் கண்டனம்

* பெரிய அளவிலான மருத்துவக் கழிவுகள் அதிகாரிகளின் கவனத்திற்குப் படாமல் தமிழக எல்லைக்குள் நுழைந்தது எப்படி?

* தமிழகத்தை குப்பைத் தொட்டியாகப் பயன்படுத்தும் இத்தகைய செயல்பாடுகளைத் தடுக்கத் தவறியுள்ள தவெக அரசின் அலட்சியமும் மெத்தனமும் கடும் கண்டனத்திற்குரியது.

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி போராட்டம் நடத்திய மாணவர்கள் கைது

* அனுமதியின்றி போராட்டம் நடத்திய மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

* ராயப்பேட்டையில் புதுக்கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

* சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவப்பிரசாத், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பணியிட மாற்றம்.

* திருச்சி ஆயுதப்படை டிஐஜி விஜயலட்சுமி சென்னை ஊர்க்காவல் படை டிஐஜியாக பணியிட மாற்றம்.

அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!- அன்புமணி வலியுறுத்தல்

* அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்த இந்தியாவிலிருந்து அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும்.

* மொத்த வணிகர்களின் அரிசி கையிருப்புக்கு உச்சவரம்பு நிர்ணயிக்க வேண்டும்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு- சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி

* சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்திருந்த தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை ஆட்சி மாற்றத்துக்கு பிறகு தற்போதைய த.வெ.க. அரசு திரும்பப் பெற்றது.

* வழக்கு விசாரணை செப்டம்பர் மாதம் 2-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

5வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி: ஒருநாள் தொடரை 3-2 என வென்றது நியூசிலாந்து

* ரூதர்போர்ட், ஹெட்மயர் ஜோடி பொறுப்புடன் ஆடி 95 ரன்களை சேர்த்தது.

* நியூசிலாந்து சார்பில் ஜேக்கப் டபி, ஜெய்டன் லெனாக்ஸ் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

சீனா ஓபன் பேட்மிண்டன்: ஆயுஷ் ஷெட்டி 2வது சுற்றுக்கு முன்னேற்றம்

* சீனா ஓபன் பேட்மிண்டன் தொடர் அங்குள்ள சாங்சோவ் நகரில் நடந்து வருகிறது.

* இதில் அதிரடியாக ஆடிய ஆயுஷ் ஷெட்டி முதல் செட்டை 21-17 என வென்றார்.

தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம் - டெல்லியில் 16 மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடல்!

* ராஜீவ் சௌக், மண்டி ஹவுஸ் உட்பட 16 ஸ்டேஷன்கள் தற்காலிகமாக மூடல்.

* 3 நிலையங்களில் ஒரு பாதையிலிருந்து மற்றொரு பாதைக்கு மாறுவதற்கான இணைப்பு ரெயில் சேவை தொடர்ந்து இயங்கும்.

டெல்லியில் ராகுல் காந்தி கைது - முதலமைச்சர் விஜய் கண்டனம்

* வாக்கு அரசியல் செய்வதற்காக, பொய்யான வாக்குறுதிகளை நாம் ஒருபோதும் அளிக்கமாட்டோம்.

* மக்களின் உணர்வுகளையும் மாணவர்களின் உணர்வுகளையும் ஒன்றிய அரசு மதித்தே ஆக வேண்டும்.

பரிதாபமாக காட்சி தரும் கோயம்பேடு பஸ் நிலையம்- சமூக விரோதிகளின் கூடாரமாக மாறுகிறது

* கோயம்பேடு என்பது வெறும் பஸ் நிலையமல்ல, ஒரு தலைமுறையின் பயண நினைவகம்

* போலீஸ் ரோந்தும் இல்லாததால் பொதுமக்கள் உள்ளே செல்லவே அஞ்சுகிறார்கள். கழிப்பறைகளும் பராமரிக்கப்படாததால் துர்நாற்றம் வீசுகிறது.

டெல்லி போராட்டக்களத்தில் காயமடைந்த மாணவி நலமுடன் உள்ளார்-மருத்துவர்கள் அறிவிப்பு!...

இச்சம்பவத்தில் 100-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களும், 118 காவல் துறையினரும் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

எங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம் - சுப்ரீம் கோர்ட் சாடல்

* டெல்லியில் மாணவர்கள் மீது தடியடி நடத்தியது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

* தாக்குதல் காணொளிகளை எங்களுக்கு பார்க்க ஆர்வமும், நேரமும் இல்லை என்று தலைமை நீதிபதி தெரிவித்தார்.

எம்.பி.பி.எஸ். படிப்புக்கு விண்ணப்பிக்க மேலும் 2 நாட்கள் அவகாசம்

* எம்.பி.பி.எஸ். மற்றும் பல் மருத்துவ படிப்பில் 15 ஆயிரம் இடங்கள் உள்ளன.

* ஆகஸ்ட் முதல் வாரத்தில் தரவரிசை பட்டியல் வெளியிட வாய்ப்பு உள்ளது.

சீனா ஓபன் பேட்மிண்டன்: 2வது சுற்றுக்கு முன்னேறினார் பி.வி.சிந்து

* சீனா ஓபன் பேட்மிண்டன் தொடர் அங்குள்ள சாங்சோவ் நகரில் நடந்து வருகிறது.

* வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை பி.வி.சிந்து 21-10 என வென்றார்.

சென்னையில் மழைக்கு வாய்ப்பு

* தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

* சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

அறங்காவலர் நியமனத்திற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு - இந்து சமய அறநிலையத்துறை

* கோயில் அறங்காவலர் விண்ணப்ப அவகாசம் ஆகஸ்ட் 12 வரை நீட்டிப்பு!

* இணையதளம் அல்லது அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க அரசு அறிவுறுத்தல்!

எதிர்க்கட்சிகள் அமளி: இரு அவைகளும் நாள்முழுவதும் ஒத்திவைப்பு

* எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

*இதனால் அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

ஹார்முஸ் ஜலசந்தி மீதான ஈரானின் கோரிக்கை ஆபத்தான முன்னுதாரணத்தை உருவாக்கும்: ஆசிய தலைவர்களிடம் மார்கோ ரூபியோ எச்சரிக்கை

* மேற்கு ஆசியப் போரில் அமெரிக்கா அதிக கவனம் செலுத்தி வந்தாலும், நாங்கள் 100 சதவீதம் ASEAN அமைப்புடன் துணை நிற்கிறோம்.

* ஒரு நாடு சர்வதேச நீர் வழிப்பாதையை கட்டுப்படுத்தவும், அதற்கான கட்டணத்தை வசூலிக்கவும் கட்டணம் செலுத்தாத கப்பல்களை தகர்க்கவும் முடிவு செய்யக்கூடிய ஒரு முன்னுதாரணத்தை மத்திய கிழக்கில் நாம் உருவாக்கினால், அது மிகவும் ஆபத்தான ஒரு முன்னுதாரணமாக அமையும்.

Marco Rubio
மார்கோ ரூபியோ

மாணவர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர செய்ய வேண்டியது இதுதான்: ராகுல் காந்தி விளக்கம்

* மாணவர்கள் அமைதியான வழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

* நீட் தேர்வில் ஓராண்டுக்கு 1.32 லட்சம் கோடி புழங்குகிறது.

முதல்வர் காலை உணவுத் திட்டத்தின் பெயரை மாற்றியது த.வெ.க. அரசு

* பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

* இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Chief Minister Morning Food Scheme
முதல்வர் காலை உணவு திட்டம்

டெல்லி போராட்டத்தை ஹைஜாக் செய்ய முயற்சி! மாணவர்களுக்கு எச்சரிக்கை - அண்ணாமலை

* போராட்டத்தை ஹைஜாக் செய்ய முயற்சி நடக்கிறது.

* மத்திய அரசு உடனே பேச்சுவார்தை நடத்த வேண்டும்.

ஊழல், சமரச அரசியல்: மம்தா மற்றும் அபிஷேக் பானர்ஜியை விளாசிய சுவேந்து அதிகாரி

* இந்து மதத்தை தவறாகப் பயன்படுத்தி நீங்கள் (மம்தா) மேற்கொண்ட அந்த வகையான சமரசம் செய்து கொள்ளும் அரசியல், அடிப்படைவாதிகளின் அரசியலை விடவும் மோசமானது.

* உங்கள் உண்மையான முகத்தை நான் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துவிட்டேன். நீங்கள் ஒரு திருடன் என்பதை உங்கள் வாழ்நாளிலேயே நான் நிரூபிப்பேன்.

Suvendu Adhikari
சுவேந்து அதிகாரி

குற்றத்தை ஒப்புக்கொண்ட டேவிட் வார்னர்: சிறைக்கு செல்ல வாய்ப்பு

* தனது செயல் முட்டாள்தனமானது.

*மது அருந்திவிட்டு வாடகை காரில் செல்லாமல் தானே வாகனத்தை ஓட்டிச்சென்றது தவறு.

இந்த அணியில் தோல்வி குறித்த பயத்திற்கு இடமில்லை: ஷ்ரேயாஸ் அய்யர்

* அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடர்களில் முடிவுகள் எங்களுக்குச் சாதகமாக அமையவில்லை.

* ஆனால் அது அணியை ஒருவருக்கொருவர் மேலும் நெருக்கமாக்கியுள்ளது.

Shreyas Iyer
ஷ்ரேயாஸ் அய்யர்

ஐசிசி ஒருநாள் தரவரிசை: ஒரு புள்ளி வித்தியாசத்தில் முதலிடத்தை தவறவிட்ட கில்

* ஒருநாள் தொடரில் சுப்மன் கில் 802 புள்ளிகள் பெற்றுள்ளார்.

* விராட் கோலி, ரோகித் சர்மா இங்கிலாந்து தொடரில் சிறப்பாக செயல்பட்டதால் முன்னேறினர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com