Tamil News Live: இன்றைய முக்கியச் செய்திகள் - 18 ஆகஸ்ட் 2026

தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
Tamil News Live: இன்றைய முக்கியச் செய்திகள் - 18 ஆகஸ்ட் 2026

சட்டசபையில் இன்று இளைஞர் நலன், விளையாட்டு, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள், பொதுப்பணி, மனிதவள மேம்பாட்டுத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது.

கடலூரில் இந்துஸ்தான் ஆயில் நிறுவனம், மேம்பாட்டுக் கிணறுகள் அமைப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது.

சட்டசபையில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் தொடங்கியது.

கர்நாடகாவில் சுட்டுக்கொல்லப்பட்ட 3 தமிழர்கள் - கவன ஈர்ப்பு தீர்மானத்தில் மனோஜ்பாண்டியன் உரை

கர்நாடகாவில் கால்நடை தேடிச்சென்ற 3 தமிழர்கள் கர்நாடக வனத்துறையால் சுட்டுக்கொலை.

அப்பாவி விவசாயிகளை வனத்துறை சுட்டுக்கொன்றது மனித உரிமை மீறல் - மனோஜ்பாண்டியன்

கவன ஈர்ப்பு தீர்மானத்தில் எடப்பாடி பழனிசாமி உரை

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் தனது கால்நடை தேடிச்சென்ற 3 தமிழர்கள் சுட்டுககொலை, ஒருவர் படுகாயத்துடன் சிகிக்சை.

மான் வேட்டையில் ஈடுபட்டதாக 3 தமிழர்களை குற்றம்சாட்டி கொன்றுள்ளது கர்நாடக வனத்துறை.

2 மாநில எல்லை பகுதியில் கொலை நடைபெற்றுள்ளதால் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை.

வனத்துறை சுட்டுக்கொன்ற தமிழர்களுக்கு ரூ.5 லட்சம் மட்டுமே இழப்பீடு அறிவிப்பு, தமிழக அரசு கூடுதலாக நிதி தர வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

பாமக எம்எல்ஏ கணேஷ் உரை

மேட்டூர் கட்டப்பட்டதால் கர்நாடகாவிற்கு புலம்பெயர்ந்த 3 பேர் சுட்டுக்கொலை.

தங்கள் கால்நடைகளை தேடிச்சென்றவர்களை சுட்டுக்கொன்றுள்ளது கர்நாடக வனத்துறை.

மான் வேட்டைக்கு சென்றவர்கள் சுட்டுக்கொலை என்பது ஏற்புடையது அல்ல.

தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதில் ஏதோ இருக்கிறது என கர்நாடக எம்எல்ஏவே கூறுகிறார். கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் - பாமக எம்எல்ஏ கணேஷ்

கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து சிபிஐ விசாரணை தேவை - காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பட்

கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக்கொலை - அதிமுக, பாமக, காங்கிரஸ், சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தல்.

தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட வேண்டும் - தளி இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ ராமச்சந்திரன்

தமிழர்களின் உயிரை துப்பாக்கி குண்டுகள் தீர்மானிக்கக்கூடாது. சிபிஐ விசாரணைக்கு கர்நாடக அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் - இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ ராமச்சந்திரன்

மான் வேட்டைக்கு சென்றவர்கள் சுட்டுக்கொலை என்பது பொய்யான செய்தி - கீழ்வேளூர் மார்க்சிஸ்ட் எம்எல்ஏ லதா

பாஜக எம்எல்ஏ போஜராஜன்

துப்பாக்கிச்சூட்டில் பலியான தமிழர்கள் குடும்பத்திற்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும்.

பலியான தமிழர்கள் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசும் நிதி வழங்க வேண்டும்.

தமிழர்கள் நலனுக்கு கட்சி வேறுபாடுகள் இன்றி ஒன்றிணைய வேண்டும்.

கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக்கொலை - கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு அமைச்சர் நிர்மல்குமார் பதில்

சுட்டுக்கொல்லப்பட்ட தமிழகர்கள் குடும்பத்திற்கு கூடுதல் நிதி வழங்குவது குறித்து கர்நாடகா பரிசீலனை.

தமிழர்களை சுட்டுக்கொன்ற வனத்துறை மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு.

தமிழர்களை சுட்டுக்கொன்ற வனத்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் விஜய் வலியுறுத்தல்.

உலகம் முழுவதும் உள்ள ஒட்டுமொத்த தமிழர்களின் ஒரே நம்பிக்கை முதலமைச்சர் விஜய் - அமைச்சர் நிர்மல்குமார்

திமுகவை விமர்சித்து அமைச்சர் நிர்மல்குமார் பேசியவை அவை குறிப்பில் இருந்து நீக்கம் - சபாநாயகர்

அமைச்சர் நிர்மல்குமார் இனி தேவையற்றதை பேச அனுமதிக்க மாட்டேன் - சபாநாயகர்

யாருடைய கவனத்தை ஈர்க்க இப்படி பேசுகிறீர்கள்? - அமைச்சர் நிர்மல்குமாருக்கு சபாநாயகர் கண்டிப்பு

கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக்கொலை - தவெக அரசு அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? - பாமக

சிபிஐ விசாரணை தேவை என்கிறோம் - தவெக அரசின் நிலைப்பாடு என்ன? - பாமக

கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக்கொலை - கர்நாடக அரசின் விசாரணையை தமிழ்நாடு அரசு கண்காணிக்கிறது - அமைச்சர் நிர்மல்குமார்

கர்நாடகாவில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள் குடும்பத்திற்கு நிதி வழங்கப்படுமா? - எடப்பாடி பழனிசாமி

கர்நாடகாவில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி - அமைச்சர் ரஞ்சித்

தமிழர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டதில் தமிழ்நாடு அரசின் மேல் நடவடிக்கை என்ன?

தமிழர்களை சுட்டுக்கொன்றவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய தமிழக அரசு கோரியுள்ளதா? - திமுக

பரங்கிப்பேட்டையில் இந்துஸ்தான் ஆயில் எக்ஸ்ப்ளோஷன் நிறுவன கிணறுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு என கவன ஈர்ப்பு தீர்மானம்.

கடலூர் பரங்கிப்பேட்டையில் ஹைட்ரோ கார்பன் திட்டமா? அமைச்சர் ராஜீவ் விளக்கம் அளித்தார்.

பரங்கிப்பேட்டையில் 4 புதிய எண்ணெய் கிணறுகள் அமைக்க இந்துஸ்தான் நிறுவனம் திட்டம்.

மீனவர்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் முதலமைச்சர் விஜய் அரசு அனுமதிக்காது.

சுற்றுச்சூழலை பாதிக்கும் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம்.

எம்எல்ஏ தமிமுன் அன்சாரி உரை

சுற்றுச்சூழல் பாதிப்பை கூர்ந்தாய்வு செய்து அரசு நடவடிக்கை என அமைச்சர் கூறி உள்ளார்.

புதிதாக 4 கிணறு தோண்டினால் மீனவர் நலன் என பல பாதிப்பு உள்ளதால் அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம்.

பரங்கிப்பேட்டையில் ஹைட்ரோ கார்பன் கிணறு அமைப்பதற்கான HOEC நிறுவன விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும்.

ஹைட்ரோ கார்பன் கிணறு திட்டத்தால் புதுவை முதல் கன்னியாகுமரி வரை கடல் வளம் பாதிக்கப்படும் - சிபிஐ எம்எல்ஏ மாரிமுத்து

3 கிணறுகளுக்கு திமுக ஆட்சியிலும், ஒரு கிணறுக்கு அதிமுக ஆட்சியிலும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது - அமைச்சர் ராஜீவ்

மீன்வளம், சுற்றுச்சூழலை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் தவெக அரசு அனுமதிக்காது - அமைச்சர் ராஜீவ்

பொதுப்பணித்துறை மானிய கோரிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா

மனிதவள மேலாண்துறை மானிய கோரிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் சரத்குமார்.

4 துறைகள் மீதான மானிய கோரிக்கை தொடங்கியது.

மானியக் கோரிக்கை மீது விவாதம் - எதிர்க்கட்சி கொறடா எ.வ.வேலு உரை

சென்னை வள்ளுவர் கோட்டம் முதல் குமரி வள்ளுவர் சிலை வரை கலைஞரின் அடையாளம் இல்லா ஊரே இல்லை - எ.வ.வேலு

விடுதலை போராட்ட வீரர்களுக்கு சிலைகள், மணிமண்டபங்கள் அமைத்து தந்தோம் - எ.வ.வேலு

பெரியார் கொள்கை தலைவர் என தவெக தம்பட்டம் அடித்துக்கொள்கிறது - எ.வ.வேலு

3 மாத காலமாக பெரியார் நூலகத்தை கிடப்பில் போட்டது ஏன்? - எ.வ.வேலு

அண்ணா அறிவாலயத்தில் பெரியார் சிலை இல்லை.

எங்கள் கட்சி அலுவலகத்தில் பெரியாருக்கு சிலை இருக்கிறது - ஆதவ் அர்ஜூனா

கோவை தந்தை பெரியார் நூலகத்தை திறக்க வேண்டும் - எ.வ.வேலு கோரிக்கை

மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கையில் தான் கடந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்தோம் - எ.வ.வேலு

காலை உணவுத்திட்டத்திற்கு காமராஜர் பெயரை வைக்க வேண்டிய அவசியம் என்ன?

புதிய திட்டத்திற்கு காமராஜர் பெயரை வைத்தால் அதை வரவேற்கிறோம்.

முதலமைச்சர் என்பது பொதுவான சொற்றொடர் - எ.வ.வேலு

மானியக்கோரிக்கையை விட்டுவிட்டு காலை உணவு குறித்து பேசுவது ஏன்? - அமைச்சர் செங்கோட்டையன்

அமைச்சர் போல் திமுக ஆட்சியின் சாதனைகளை பட்டியல் போடுகிறீர்கள் - சபாநாயகர்

டெண்டர் விலையை உயர்த்தி முறைகேடு செய்யத் தெரியாது என முதல்வர் கூறுகிறார் - எ.வ.வேலு

முதலமைச்சருக்கு அதிக திறமை இருக்கிறது என்பதை ஏற்கிறேன் - எ.வ.வேலு

4 வழித்தடம், 2 வழித்தடம் சாலைகள் இந்த நிதி ஆண்டில் எவ்வளவு அமைக்கப்பட்டது? - எ.வ.வேலு

எ.வ.வேலு உரை

இந்த நிதி ஆண்டுக்கான எதிர்கால திட்டமிடல் குறித்து எதுவும் இல்லை.

வெள்ளத் தடுப்புப் பணிகள் குறித்து கொள்ளை விளக்க குறிப்பில் இல்லை.

சட்டசபையை கலைநயமிக்கதாக மாற்றியது திமுக தான்.

அரசு அதிகாரிகள் பொதுவானவர்கள்.

நேற்று எங்களுக்கு சல்யூட்... இன்று உங்களுக்கு சல்யூட் - எ.வ.வேலு

2003-ல் பழைய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டது - எ.வ.வேலு

மானியக்கோரிக்கை தொடர்பாக மட்டும் பேசுங்கள் - சபாநாயகர்

பொதுக்கூட்டத்தில் பேசுவதை போல் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பேரவையில் பேசிக்கொண்டிருக்கிறார் - அமைச்சர் செங்கோட்டையன்

பொதுக்கூட்டத்தில் பேசுவதை போல் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பேரவையில் பேசிக்கொண்டிருக்கிறார் - அமைச்சர் செங்கோட்டையன்

பெயர் மாற்றம் என்பது கலைஞர் ஆட்சியிலும் இருந்தது என்பதை சுட்டிக்காட்டி அமைச்சர் ராஜ்மோகன் பேசினார்.

அந்த மைக், சேர், டேபிள் செய்தது நாங்கள் தான் என்கிறார்கள். இவை அனைத்தும் செய்தது மக்கள் வரிப்பணத்தில் தான்.

கடந்த திமுக ஆட்சியில் அம்மா மினி கிளினிக் முதல்வர் கிளினிக் ஆக மாறி உள்ளது.

காலை உணவுத்திட்டத்தின் பெயர் காமராஜர் பெயரில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. காலை உணவுத்திட்டத்திற்கு காமராஜர் பெயரை தவிர வேறு எந்த பெயரும் பொருத்தமாக இருக்காது - அமைச்சர் ராஜ்மோகன்

தவெக அரசின் வாக்குறுதி புத்தகத்தில் அறம் திட்டத்தின் 25-வது பக்கத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் பற்றி கூறி உள்ளீர்கள்.

எந்த ஓய்வூதிய திட்டத்திற்கு தவெக அரசு அனுமதி அளிக்கப்போகிறது, அரசு அதிகாரிகளுக்கு தெளிவான விளக்கம் தேவை.

முதல்வர் அறையை தயார் செய்ய ரூ.5.54 கோடி மதிப்பிலான பணிக்கு டெண்டர் விடப்படவில்லை என்ற செய்தியை சுட்டிக்காட்டி எ.வ. வேலு பேச்சு

அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உரை

வாழைப்பழத்தில் ஊசி ஏற்றி அதனை மக்களுக்கே கொடுப்பது போல் சிரித்துக்கொண்டு பேசியிருக்கிறார் எ.வ.வேலு

கடந்த 5 வருட பத்திரிகை செய்திக எடுத்து பார்த்தால் பொதுப்பணித்துறையில் ஊழல் மட்டுமே நிறைந்திருக்கும்.

முதல்வர் அறை மாற்றத்திற்கான டெண்டர் இன்னும் முடியவில்லை.

5 வருடத்தில் நடைபெற்ற டெண்டர் குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிட உள்ளோம்.

தான் மட்டும் நல்ல அறையில் அமர்ந்திருக்க வேண்டும் என முதல்வர் நினைக்கவில்லை - அமைச்சர் ஆதவ்

கலைஞரும், ஜெயலலிதாவும் புதிய தலைமைச்செயலகத்தை கட்ட வேண்டும் என நினைத்தனர் - அமைச்சர் ஆதவ்

தான் மட்டும் நல்ல அறையில் அமர்ந்திருக்க வேண்டும் என முதல்வர் நினைக்கவில்லை.

முதல்வரை சுற்றி பணியாற்றும் 80-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அவரை காண வருவோர் வசதிக்காகத்தான் அறை மாற்றம்.

எளிமையை விரும்பும் முதலமைச்சர் விஜய், தன்னை சுற்றி இருப்பவகளை நினைத்துதான் அறையை மாற்றுகிறார் - அமைச்சர் ஆதவ்

அதிகாரிகள் எந்த திட்டத்தை தீட்டினாலும் அமைச்சரின் கவனத்திற்கு வராமல் வெளியிடப்படாது.

நெடுஞ்சாலை, பொதுப்பணித் துறையிலும் விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட உள்ளது - ஆதவ்

ராணிப்பேட்டை தொகுதி தவெக எம்எல்ஏ தாஹிரா உரை

வாயால் வடை சுட்ட காலம் போய் சுவையான வடை சுட்டு கையில் கொடுக்கும் காலம்.

முதலமைச்சரை பேச சொல்லும் கூட்டம், அவர் பேசத் தொடங்கினால் ஓடுகிறது.

தவெக ஆட்சி ஊழலற்ற உண்மையான மக்கள் ஆட்சி.

ராணிப்பேட்டையில் புதிய மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, வாலாஜா அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் - எம்எல்ஏ தாஹிரா

கட்சி கொடி நிறத்தில் உடை அணிந்திருப்பது ஏன்? என எம்எல்ஏ தாஹிரா விளக்கம்

தலைவருடன் கடந்த 27 ஆண்டுகளாக பயணித்து இருக்கிறேன்.

தமிழ்நாட்டில் முதல் பெண் ரசிகர் மன்றத்தில் நான் அந்த பட்டத்தை வாங்கி இருக்கிறேன்.

என்னைப்போன்ற பெண்களுக்கு முக்கிய இடத்தை கொடுத்து இந்த இடத்தில் நிற்க வைத்து இருக்கிறார்.

எந்த அரசியல்வாதிகளும், எந்த அமைப்பில் இருப்பவர்களும் இஸ்லாமிய பெண்களுக்கு முதல் இடம் கொடுத்தது இல்லை.

எங்கள் தலைவர் கட்சியில் பதவி கொடுத்தபோது அவருடன் பக்கத்தில் அமரவைத்து கவுரவித்தார்.

அந்த கவுரம் என்னை சார்ந்தது மட்டும் அல்ல. இஸ்லாமியர்கள் அனைவருக்குமான பெருமை அளிப்பதுபோல் நடத்தினார்.

அன்றே முடிவு செய்தேன். எந்த கட்சிக்காக இந்த இடத்திற்கு நான் வந்தேனோ சாகும் வரை இந்த ஆடை தான் அணிந்து இருப்பேன். இது என் அடையாளம் என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்,.

தளபதியால் நான், தளபதிக்காகவே நான், என்றும் தலைமைக்கும் தளபதிக்கும் விசுவாசத்துடன் நன்றியுடன் நடந்து கொள்வேன் - எம்எல்ஏ தாஹிரா

என்எல்சி தொழிலாளர்கள் நலன் குறித்து அதிமுக எம்எல்ஏ ராஜேந்திரன் உரை

சுற்றுவட்டார கிராமங்களின் மேம்பாட்டிற்கு என்எல்சி 3% சிஎஸ்ஆர் நிதி தர வேண்டும்.

சிஎஸ்ஆர் நிதி தொடர்பாக என்எல்சியை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.

செம்மேடு - தாழம்பட்டு சாலை பெரிய ஓடையின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைத்து தர வேண்டும் - எம்எல்ஏ ராஜேந்திரன்

மானியக்கோரிக்கை விவாதம் - காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பட் உரை

எனது வெற்றிக்கு உழைத்த கூட்டணி கட்சியினருக்கு நன்றி.

ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கொடுத்து, கூட்டணி கட்சிக்கு மரியாதை தந்தவர் விஜய்.

தவெக பட்ஜெட் ஏழை, எளிய மக்களுக்கான பட்ஜெட்.

தமிழகத்திற்கான நிதியை மத்திய அரசிடம் இருந்து பெற காங்கிரஸ் உறுதுணையாக இருக்கும்.

காலை உணவுத்திட்டத்திற்கு காமராஜர் பெயர் சூட்டியதற்க நன்றி.

காங்கிரஸ் திட்டங்களை மாற்றும் பாஜக, நீட் தேர்வை ஏன் மாற்றவில்லை?

100 நாள் வேலைத்திட்டத்தை நிறுத்துவதற்கு பாஜக முயற்சி செய்கிறது - தாரகை கத்பட்

இருமொழிக் கொள்கையை பாதுகாப்பதிலும் காங்கிரஸ் உறுதியாக இருக்கும்.

IREL அரிய வகை கனிம நிறுவனத்தால் கடல் அரிப்பு, கடற்கரை சுருங்கி விட்டது - தாரகை கத்பட்

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு காங்கிரஸ் வரவேற்பு.

மீனவர்கள் கைது பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

கடலில் காணாமல் போகும் மீனவர்களை மீட்க கடல் ஆம்புலன்ஸ் தேவை - தாரகை கத்பட்

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மிகப்பெரிய சவாலாக உள்ளன. இரும்புக்கரம் கொண்டு குற்றங்களை அரசு அடக்க வேண்டும் - தாரகை கத்பட்

குளச்சல் தொகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.

தாமிரபரணி, கோதையாறு, பரளியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் தேவை - தாரகை கத்பட்

கன்னியாகுமரியில் உள்ள அனைத்து குளங்களையும் இணைக்க வேண்டும் - தாரகை கத்பட்

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தான் நீட் வந்தது என தாரகை கத்பட் கூறி விட்டார் - பாஜக எம்எல்ஏ போஜராஜன்

காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பட் உரை

நீட் எந்தெந்த மாநிலத்திற்கு தேவையோ அந்த மாநிலத்திற்கு கொண்டு வரலாம் என்று தான் சொன்னோம்.

காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த ஒவ்வொரு சட்டத்தையும் பில் திருத்தம் என்ற பெயரில் அனைத்து சட்டத்தையும் பாஜக அரசு திருத்திக்கொண்டு இருக்கிறது.

மக்களுக்கு எது தேவையோ அதை காங்கிரஸ் ஆட்சியில் நாங்கள் கொண்டு வந்தோம்.

அனைத்து திட்டங்களையும் திருத்திக்கொண்டு இருக்கும்போது மாணவர்களுக்கான இந்த திட்டத்தை திருத்துவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்?

மானியக் கோரிக்கை விவாதம் - விக்கிரவாண்டி பாமக எம்எல்ஏ சிவக்குமார் உரை

விக்கிரவாண்டியில் தொழிற்பயிற்சி கல்லூரி அமைத்து தர வேண்டும்.

விக்கிரவாண்டியில் சிங்கப்பெண் சிறப்புப் படை காவல் நிலையம் தேவை.

நந்தன் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றித் தர வேண்டும்.

8 ஆண்டுகளுக்கு முன்பு அமைச்சராக இருந்தபோது தூர்வாரும் பணி நடைபெற்றது.

ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் நந்தன் கால்வாய் தூர்வாரும் பணி நடைபெற்றது - சிவி சண்முகம்

வைபவ் சூர்யவன்ஷி போல் குழந்தைகள் விளையாட்டில் சாதிக்க வேண்டும்.

டிஎன்பிஎஸ்சியில் 8 உறுப்பினர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.

தமிழகத்தில் அளவுக்க அதிகமாக உள்ள சுங்கச்சாவடிகளை மூட வேண்டும்.

மத்திய அரசிடம் பேசி சுங்கச்சாவடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக எம்எல்ஏ சிவக்குமார்

காங்கிரஸ், பாஜக உடலில் இருப்பது ஒரே ஜீன் தான்.

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி நீட் தொடர்வதாக பாஜக உறுப்பினர் கூறுகிறார் - சிவி சண்முகம்

மாணவர்கள் மீது அக்கறை இருந்திருந்தால் நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வந்து நீட்டை நீக்கி இருக்கலாம்.

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் நீட்டை தொடர்வதாக பாஜக கூறுவது எல்லாம் ஏமாற்று வேலை.

உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த 6 மாதங்களில் கனிமவள சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது மத்திய பாஜக அரசு - சிவி சண்முகம்

உச்சநீதிமன்ற தீர்ப்பை செல்லாததாக்கி சட்டத்திருத்தம் கொண்டு வரும் மத்திய அரசால் நீட்டை நீக்க முடியாதா? - சிவி சண்முகம்

ஆலங்குடி தொகுதி திமுக எம்எல்ஏ மெய்யநாதன் உரை

விருது பெறும் வீரர்களுக்கான ஊக்கத்தொகை கிடைப்பதில் முன்பு சிக்கல் இருந்தது.

திமுக ஆட்சியில் 48 மணி நேரத்தில் உயரிய ஊக்கத்தொகை கிடைத்தது.

5 ஆண்டு கால ஆட்சியில் 6,689 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.215 கோடி ஊக்கத்தொகை அளிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு விடுதியில் ஏசி பொருத்தித் தர வேண்டும்.

வீரர், வீராங்கனைகளுக்கு ஸ்மார்ட் வாட்ச் வழங்க வேண்டும்.

அனைத்து தொகுதிகளிலும் மினி ஸ்டேடியம் திட்டம் தொடர வேண்டும் - எம்எல்ஏ மெய்யநாதன்

உலக செஸ் போட்டியை முதல் முதலில் தமிழ்நாட்டில் நடத்தியவர் ஜெயலலிதா.

ரூ.29 கோடியில் செஸ் போட்டியை நடத்தியவர் ஜெயலலிதா - சபாநாயகர்

கட்டாய விளையாட்டு, உடற்பயிற்சிக்கு நிதி ஒதுக்கப்படுகிறதா? - மெய்யநாதன் கேள்வி

அதிமுக எம்எல்ஏ மணி

தமிழ்நாட்டில் சாலை புரட்சியை உருவாக்கியவர் இபிஎஸ்.

தொலைநோக்குடன் பல மேம்பாலங்களை கொண்டு வந்தவர் இபிஎஸ்.

விவசாயிகள் என்ற பெயரில் வண்டல் மண்ணை அதிகம் அள்ளும் மாஃபியாக்களை விட மாட்டோம்.

விவசாயிகளுக்கு மட்டுமே வண்டல் மண் என்பதில் தவெக அரசு உறுதியாக உள்ளது - அமைச்சர் பிரபு

வண்டல் மண்ணை விவசாய நிலத்திற்கு மட்டும் தான் பயன்படுத்த முடியும் - எடப்பாடி பழனிசாமி

விவசாயிகளை மாஃபியாக்கள் எனக்கூறுவதை ஏற்க முடியாது என இபிஎஸ் கூறியதற்கு நான் விவசாயிகளை குறிப்பிடவில்லை என அமைச்சர் பிரபு பதில் அளித்தார்.

வண்டல் மண் பாகிஸ்தானுக்கா செல்கிறது? - அதிமுக

பக்கத்து ஊருக்கு கூட போகாது - அமைச்சர் பிரபு

வண்டல் மண் பிரச்சனைக்காக 4 எம்எல்ஏக்கள் நேரில் சென்றபோது சேலம் ஆட்சியர் அவமதித்து விட்டார்.

சேலம் ஆட்சியருக்கு 47 முறை தொலைபேசியில் அழைத்தும் அவர் பேசவில்லை - எம்எல்ஏ மணி

எம்எல்ஏக்களிடம் அதிகாரிகள் உரிய முறையில் நடந்து கொள்ள வேண்டும் என அரசு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

தேவைப்படும் பட்சத்தில் கலந்துரையாடி அதிகாரிகளுக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பிரேமலதா விஜயகாந்த் உரை

விளையாட்டின் முக்கியத்துவத்தை ஒரு விளையாட்டு வீராங்கனையாக நான் உணர்ந்துள்ளேன்.

இளைஞர்களின் எதிர்காலமே நாட்டின் வருங்காலம்.

போதையில் இருந்து இளைஞர்களை மீட்க விளையாட்டு அவசியம்.

இளைஞர்களுக்கு ஒழுக்கத்தை கற்றுத் தருவது விளையாட்டு.

கிராமப்புறங்களில் உள்ள விளையாட்டு மைதானங்களை மேம்படுத்த வேண்டும்.

சேதமடைந்த மாநில நெடுஞ்சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்

தமிழ்நாடு முழுவதும் உள்ள பாரம்பரிய கட்டிடங்களை மேம்படுத்த வேண்டும்.

பல இடங்களில் அரசு அலுவலகங்கள் மிகவும் மோசமாக உள்ளன.

விருத்தாசலம் அரசு அச்சகத்தை புனரமைக்க வேண்டும்.

அரசு கட்டிடங்கள் தனியார் கட்டிடங்கள் போன்று பராமரிக்கப்பட வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்

சாலைப்பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். காலியாக உள்ள பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்.

தமிழ்நாடு முழுவதும் மாணவர் விடுதிகள் சுத்தம் சுகாதாரம் இல்லாத நிலையில் உள்ளன.

கர்நாடகா, ஆந்திரா, இலங்கை எந தமிழர்கள் அனைத்து இடங்களிலும் தாக்கப்படுகின்றனர் - பிரேமலதா விஜயகாந்த்

மாணவர் படுகொலை, குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு போதையே காரணம்.

இதுபோன்ற கொடூர குற்றங்களுக்கு என்கவுன்டர் மட்டுமே தீர்வு - பிரேமலதா விஜயகாந்த்

லாக்அப் மரணங்களில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிதியுதவி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும்.

சபரிவர்மன் மட்டுமின்றி பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிதியுதவி, அரசு பணி வழங்க வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்

அரசு பெண் ஊழியர்களின் 3வது குழந்தைக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு: அமைச்சர் சரத்குமார்

விளையாட்டுத்துறைக்கான மானியக்கோரிக்கை மீதான பதிலுரையில் ஆதவ் அர்ஜூனா கூறியதாவது:-

* 38 விளையாட்டு மாவட்டத்தில் விளையாட்டு விடுதி தொடங்கப்படும்

* மாற்று திறனாளிகளுக்கு தனிப்பட்ட வசதி செய்து தரப்படும்.

* சென்னையில் பாரா ஒலிம்பிக் பயிற்சி மையம் ஏற்படுத்தப்படும்.

* பெண்களுக்கான சிங்கப்பெண் விளையாட்டு திருவிழா நடத்தப்படும்.

* ஆண்டுதோறும் கிராமிய பாரம்பரிய விளையாட்டுப் போட்டுகள் நடத்தப்படும்.

* திறமையான மாணவர்களை கண்டுபிடித்து ஒலிம்பிக் பயிற்சி.

* ஒலிம்பிக், பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகை அதிகரிப்பு.

* விளையாட்டு சங்கங்கள் பிரச்சனை இருந்தால் SDAT சங்கத்தை ஏற்று நடத்தும்

* திருநர்களுக்கான போட்டி நடத்தப்படும்.

* கோவையில் என்.சி.சி. அகாடமி

நெடுஞ்சாலை துறைக்கான மானியக் கோரிக்கை மீதான பதிலுரையில் ஆதவ் அர்ஜூனா கூறியதாவது:-

* மாவட்ட சாலைகள் மீது கவனம் செலுத்தப்படும்.

* சென்னை- கோவை- தூத்துக்குடி இணைக்கும் விரைவு தொழில் தர விரைவு சாலை உருவாக்கப்படும்.

* தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை விரைவுபடுத்த நடவடிக்கை

* ரூ. 500 கோடியில் சாலை பாதுகாப்பு கண்காணிப்பு குழு செயல்படுத்தப்படும்

* கடல்வழி போக்குவரத்து மும்பையில் இருப்பது போல் செயல்படுத்தப்படும்

* சென்னை- புதுவை இடையே படகு போக்குவரத்து

* 2027 முதல் சாலை விதிகள் மேலும் கடுயைமாக்கப்படும்

* பேட்ச் ஒர்க்கை ஒழிக்க புதிய திட்டம்

* ரூ. 400 கோடியில் சென்னையில் முக்கோண வழித்தட சாலை

* பாம்பன் டூ அக்னி தீர்த்தம் வரை உள்நாட்டு பயணிகள் போக்குவரத்து சேவை

* நாகை - காங்கேசன்துரை இடையிலான படகு போக்குவரத்து விரிவுப்படுத்தப்படும்

பொதுப்பணி துறைக்கான மானியக் கோரிக்கை மீதான பதிலுரையில் ஆதவ் அர்ஜூனா கூறியதாவது:-

* 30 மாடிகள் கொண்ட அரசு அலுவலகங்களை உருவாக்க வேண்டும்.

* அரசு கட்டிடங்களின் அனைத்து தரவுகளையும் ஒன்றிணைக்க DashBoard உருவாக்கப்படும்.

* கட்டிடங்களின் பராமரிப்பை ஊழல் இல்லாமல் பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்

* பணிக்காக காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு பொதுப்பணித்துறையில் சலுகைகளுடன் வாய்ப்பு

* பொதுப்பணித்துறையில் ஒப்பந்ததாரர்கள் பதிவு முறை எளிமைப்படுத்தப்படும்

* வெளிப்படை தன்மையுடன் டெண்டர்கள் உருவாக்கப்படும்.

* டெண்டர்களில் இனிமேல் பினாமிகளுக்கு இடம் கிடையாது.

சென்னை மெட்ரோவுடன் இணைகிறது பறக்கும் ரெயில் திட்டம் – ரெயில்வே வாரியம் ஒப்புதல்!

* 2 வருடத்தில் மாற்றம்: பறக்கும் ரெயில் இயக்கம், பராமரிப்பு அனைத்தும் அடுத்த 2 ஆண்டில் மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும்.

* ஒரே டிக்கெட் வசதி: மெட்ரோ, பறக்கும் ரெயில் இரண்டுக்கும் சேர்த்து ஒரே ஸ்மார்ட் கார்டு மற்றும் டிக்கெட் பயன்படுத்தலாம்.

பொறியியல் பட்டதாரிகளுக்கு பொதுப்பணித்துறை ஒப்பந்தங்களில் வாய்ப்பு: அமைச்சர் ஆதவ் அர்ஜூனா

* பணி முன்னேற்றம், தரக் கட்டுப்பாட்டைக் கண்காணித்தல் மற்றும் வெளிப்படைத் தன்மைக்காக ஒரு செயலி உருவாக்குதல்.

* பொதுப் பணித்துறையில் ஒப்பந்ததாரர்கள் பதிவு முறையை மேலும் எளிமையாக்குதல்.

காலே டெஸ்ட்: நான்காம் நாள் முடிவில் இலங்கை 84/4 - வெற்றியின் விளிம்பில் இந்தியா

* இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 193 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

* இலங்கை சார்பில் அசிதா பெர்னாண்டோ 4 விக்கெட்டும் பிரபாத் ஜெயசூர்யா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவிரைவாக 100 சிக்சர்: வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்

* இலங்கை அணி முதல் இன்னிங்சில் 284 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

* இந்தியா சார்பில் மானவ் சுதர் 4 விக்கெட்டும், ஜடேஜா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com