Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 16 செப். 2026...

தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
Live news

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

* சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் திமுக பிரமுகரான பி.டி. அரசகுமாரை கைது செய்தனர்.

* அன்பில் மகேஷின் திருச்சி வீடு மற்றும் அவர் தொடர்புடைய 6 இடங்களில் சோதனை நடைபெறுகிறது.

காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டம் - முதலமைச்சர் விஜய் 22-ந்தேதி தொடங்கி வைக்கிறார்

* முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் என்ற பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்டம் என மாற்றியது.

* இடைத்தேர்தல் நடைபெறும் செங்கல்பட்டு, திருப்பூர் மாவட்டங்களை தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்படும்.

மருத்துவர்கள் அறிவுரைப்படி ஓய்வில் உள்ளேன்- மு.க.ஸ்டாலின்

* பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான நேற்று, கழக உடன்பிறப்புகள் மேற்கொண்ட பல்வேறு நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழ்ந்தேன்.

* கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மட்டுமின்றி, பிற கட்சிகள் மற்றும் இயக்கங்களின் தலைவர்கள் காட்டிய அன்பிற்கும் அக்கறைக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

யு.பி.ஐ பரிவர்த்தனைக் கட்டண வசூல் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்!- அன்புமணி வலியுறுத்தல்

* பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்தும், கொரோனா காலத்தில் நேரடித் தொடர்புகளைத் தவிர்க்கவும் யுபிஐ மூலமான பரிவர்த்தனைகள் ஊக்குவிக்கப்பட்டன.

* ரூ.2000-க்கும் மேற்பட்ட வணிகப் பரிவத்தனைகளுக்கும் பொருள் வாங்கும் மக்கள் இந்தக் கட்டணத்தை செலுத்தத் தேவையில்லை.

தி.மு.க முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீது ஊழல் வழக்கு

* அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருவதற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

* தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது ஊழல் வழக்கை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்துள்ளனர்.

அன்பில் மகேஷ் வீட்டில் நடைபெறும் ரெய்டு அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை - மு.க.ஸ்டாலின்

* மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீது ரெய்டு அஸ்திரத்தை ஏவியுள்ளது எதற்கும் லாயக்கற்ற த.வெ.க. அரசு.

* பொய்யான குற்றச்சாட்டுகளும் சட்டத்தின் முன் நிலைக்காது என்பதை இந்த அரசு விரைவில் உணரும்!

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் கல்விக் கட்டண உதவி வழங்க வேண்டும்!- அன்புமணி

* அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இலவசக் கல்வி வழங்கப்பட்டாலும், தரமான கல்வி வழங்கப்படுவதில்லை.

* அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

ராமசாமி படையாட்சியாரின் மகத்தான மக்கள் பணியை நினைவுகூர்ந்து வணங்குகிறேன்- முதலமைச்சர் விஜய்

* எஸ்.எஸ். இராமசாமி படையாச்சியார் அவர்களின் பிறந்தநாளில், அவரது மகத்தான மக்கள் பணியை நினைவுகூர்ந்து வணங்குகிறேன்.

* எஸ்.எஸ். இராமசாமி படையாச்சியார் அவர்கள் ஆற்றிய தொண்டும், முன்னெடுப்புகளும், தமிழக அரசியல் களத்தில் அழியாத தடம் பதித்துள்ளன.

எ.வ.வேலுவுக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரித்தது சென்னை ஐகோர்ட்

* எ.வ.வேலு வெற்றியை எதிர்த்து த.வெ.க. வேட்பாளர் அருள் ஆறுமுகம், சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

* வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று எ.வ.வேலு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

உஸ்பெகிஸ்தானில் இன்று தொடங்குகிறது செஸ் ஒலிம்பியாட் போட்டி- பட்டத்தை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா!

* முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு முறையே தங்கம், வெள்ளி, வெண்கலப்பதக்கம் அளிக்கப்படும்.

* ஒவ்வொரு சுற்றும் இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.

தாராபுரம் இடைத்தேர்தல்: வேட்பு மனு தாக்கல் செய்தார் தவெக வேட்பாளர் சத்யபாமா

* வேட்பு மனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் ஆகும்.

* வேட்பு மனுக்களை திரும்ப பெற நாளை மறுநாள் கடைசி நாள் ஆகும்.

மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தடையில்லை- சென்னை உயர்நீதிமன்றம்

* நீதிபதிகள், எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முழு உரிமை உள்ளது.

* மக்களின் உரிமையை தேர்தல் ஆணையம் பாதுகாக்க வேண்டும்.

மைசூரு தசரா விழா: தமிழக முதலமைச்சர் விஜய் பங்கேற்பா?- ஆட்சியர் லட்சுமிகாந்த் பதில்

*மைசூரு தசரா ஊர்வலத்திற்கு தமிழக முதல்வர் விஜய் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களின் முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகின.

*'ஜம்பூ சவாரி' எனப்படும் தசரா யானைகள் ஊர்வலம் அடுத்த மாதம் 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

முதலமைச்சர் விஜய் நாளை காலை சென்னை திரும்புகிறார் - விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு

* லண்டனில் தங்கி உள்ள முதலமைச்சர் விஜய் முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேசி உள்ளார்.

* தனது ரசிகர்களை தி ஷார்ட் நட்சத்திர விடுதியில் சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளார்.

அமெரிக்காவில் கோரம்: பேருந்து விபத்தை நேரலை செய்த செய்தி நிறுவன ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி 3 பேர் உயிரிழப்பு...

*அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் நகரில், சாலை விபத்து தொடர்பான செய்தியை நேரலை கவரேஜ் செய்து கொண்டிருந்த NBC4 செய்தி நிறுவனத்தின் ஹெலிகாப்டர் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து நொறுங்கியது.

தாய்மாமன் தங்க மோதிர திட்டம்: செப்.25-ந்தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்

* அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தாய்மாமனின் அன்பளிப்பாக 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்.

* முதலமைச்சர் விஜயின் லண்டன் பயணம் காரணமாக இந்த திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

அடுத்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தை இந்தியாவில் நடத்த முடிவு: ஐ.பி.எல். நிர்வாகம்

* வெளிநாடுகளில் நடத்தப்பட்ட ஐ.பி.எல். ஏலம் மீண்டும் இந்தியாவிற்கு திரும்புகிறது.

* 2028-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். மெகா ஏலம் வெளிநாட்டில் நடத்தப்படலாம் என தெரிவித்தது.

தாதா சாகேப் பால்கே விருது பெறுகிறார் கன்னட நடிகர் ஆனந்த் நாக்

* கடந்த 2025-ம் ஆண்டில் ஆனந்த் நாக் இந்தியாவின் 'பத்ம பூஷன்' விருதை பெற்றுள்ளார்.

* கடந்த ஆண்டு கேரளாவின் மோகன்லால் தாதா சாகேப் பால்கே விருது பெற்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com