Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 15 செப். 2026...

தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
Live News

தமிழ்நாட்டின் அரசியல் இலக்கணத்தை எழுதிய பேரறிஞர் அண்ணாவுக்குப் புகழ் வணக்கம்! - மு.க.ஸ்டாலின்

* தலைநிமிர்ந்த தமிழர்! தலைநிமிர்ந்த தமிழ்நாடு!

* தமிழன்னையின் தனயனாகப் பிறந்து தாய்க்குப் பெயரிட்ட மாபெரும் தமிழ்க் கனவு அவர்!

அண்ணா விதைத்து பெருமரமாக்கிய தி.மு.க. பல தலைமுறைகளுக்கு நின்று பயன் தர வேண்டும்! - கனிமொழி

* ஆதாயத்திற்காக அண்ணாவின் பெயரை உச்சரிப்பவர்கள் அதிகரித்துவிட்டனர்.

* திராவிடத்தையும், பெரியாரியத்தையும், தமிழறத்தையும் ஆழ்மனதில் ஏந்திப் பயணிப்பவர்கள் அதிகம் வர வேண்டும்.

ரெட்ரோ ஸ்டைல்‌ ஏஐ படங்களை உருவாக்குவதற்கு பின்னால் இருக்கும் கசப்பான உண்மை!

*ஒரே நபர்‌ ஏராளமான புகைப்படங்களை உருவாக்கி சமூக வலைத்தளங்களில்‌ உலவ விட்டு வருகின்றனர்‌.

*புகைப்படத்தை உருவாக்குவதற்கான முக்கிய கம்ப்யூட்டிங்‌ செயல்முறை தொடங்குகிறது.

முடியவே முடியாது.. பொது சிவில் சட்டம் அமலுக்கு பீகாரில் போர்க்கொடி!

*21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்திருந்தார்.

*ஷா பேசியிருந்த நிலையில் பீகார் அதற்கு போர்க்கொடி தூக்கியுள்ளது.

பாதுகாப்பு குளறுபடி.. குடிவரவு சோதனையின்றி டெல்லியில் விமானம் ஏறிச் சென்ற 3 இத்தாலியர்கள் - மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அவசர கூட்டம்

*சோதனைக்கு செல்லாமலேயே அவர்கள் முனிச் விமானத்தில் ஏறிச் சென்றுள்ளனர்.

*அவர்களை குடியேற்ற சோதனைக்கு அனுப்பியிருக்க வேண்டும்.

வெள்ளத்தால் பாதித்த நேபாளத்திற்கு ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வீதம் டிசம்பர் வரை 654 மெகாவாட் மின்சாரம் வழங்க இந்தியா முடிவு

*2 வாரங்கள் கடந்தும் மீட்பு பணிகள் தொடந்து வருகின்றன. செப்டம்பர்

*சுமார் 130 டன்னுக்கும் அதிகமான நிவாரணப் பொருட்கள் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளன.

மகாராஷ்டிராவின் மிகப் பணக்கார பாஜக எம்எல்ஏ பிச்சைக்கரராக மாறிய வினோதம்.. என்ன ஆனது?

*ஒரு நபர் அவரிடம் ரூ.20 கொடுத்து "போய் சாப்பிடு பாபா" என்று கூறியுள்ளார்.

*ஒரு ஏழை சமோசா வியாபாரி இன்முகத்துடன் இலவசமாக சமோசா வழங்கியுள்ளார்.

ஏஐ தொழில்நுட்பத்தின் வேகத்தை கட்டுப்படுத்தனும் - ஒன்றுகூடிய ஏஐ நிறுவனங்கள் - பதறியடித்து டிரம்ப் போட்ட பதிவு

*ஏஐ இல் யார் வெல்கிறார்களோ, அவர்களே உலகை வெல்வார்கள்

*ஒரு வலுவான, அறிவார்ந்த - High IQ கொண்ட அதிபர் மட்டுமே தேவை, அது அமெரிக்காவிடம் உள்ளது

பேரறிஞர் அண்ணா தான் அன்றைக்கும் - இன்றைக்கும் - என்றைக்கும் தமிழ்நாட்டை ஆள்கிறார் - உதயநிதி

* பேரறிஞர் அண்ணா எனவும் ஜனநாயக பெருவெளிச்சம் பிறந்த நாள் இன்று!

* இருமொழி கொள்கையை உறுதி செய்த பேரறிஞர் அண்ணா தான்

GOLD PRICE TODAY: தொடர் சரிவில் தங்கம் விலை - எவ்வளவு குறைந்தது தெரியுமா?

* தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.14,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

* வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.

அண்ணாவின் பொன்னடிகளுக்குப் புகழ் வணக்கம் - வைரமுத்து

* நீ செய்த சாதனை புரிய 300 ஆண்டு வாழ்ந்தவனாலும் முடியாது

* உன் பெயர் சொல்லாமல் அரசாள இயலாது உன் கொள்கை இல்லாமல் அரசியல் கிடையாது

அவதூறு பேச்சு: ஆ.ராசா, சேகர்பாபு மீது வழக்கு பதிவு

* சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமை தாங்கினார்.

* தி.மு.க. எம்.பி.ராசா மற்றும் சேகர்பாபு ஆகியோர் முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் நிர்மல்குமார் குறித்து பேசியது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.

மு.க.ஸ்டாலினுக்கு உடல்நலக்குறைவு: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு

* 2026-ம் ஆண்டுக்கான தி.மு.க. முப்பெரும் விழா இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

* இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட தி.மு.க. முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தயவுசெஞ்சு உதவுங்க.. ஆப்கானிஸ்தானில் தனியாக பயணம் செய்த கேரள பெண் Vlogger-ஐ கைது செய்த தாலிபான்கள்

*'பேக்பேக்கர் அருணிமா' என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார்.

*ஆப்கானிஸ்தானில் பெண்கள் தனியாகப் பயணம் செய்ய சட்டப்படி அனுமதியில்லை

அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் பேரறிஞர் அண்ணா- முதலமைச்சர் விஜய்

* முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளில், அவரது தொலைநோக்குப் பார்வையையும், மக்கள் சேவையையும் நெஞ்சார நினைவுகூர்ந்து போற்றுகிறேன்.

* சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சட்ட அங்கீகாரம் வழங்கி தமிழ்நாட்டின் சமூக, அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்.

தேசிய பொறியாளர்கள் தினம்- முதலமைச்சர் விஜய் வாழ்த்து

* பொறியாளர்களின் அறிவாற்றலும் புதுமையான சிந்தனையும் வளமான, வலிமையான, முன்னேற்றம் மிக்க நாட்டினை உருவாக்கத் தொடர்ந்து துணை நிற்கட்டும்!

* தேசத்தின் உள்கட்டமைப்பை நாளும் செதுக்கிவரும் பொறியியல் வல்லுநர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள்!

தொலைக்காட்சியின் ஆஸ்கார்.. 78வது எம்மி விருதுகள் விழா வெற்றியாளர்கள் பட்டியல்

*விடோஸ் பே (Widow's Bay) சிறந்த காமெடி சீரீஸ் உட்பட 14 பிரிவுகளில் விருது வென்றுள்ளது.

*அடுத்ததாக தி பிட் (The Pitt) தொடர் சிறந்த டிராமா சீரீஸ் விருதை வென்றது.

அண்ணா ஆட்சியை மீண்டும் நிறுவிட உறுதியேற்போம்! - எடப்பாடி பழனிசாமி

* அண்ணாவின் அரசியல் வாழ்வு, தலைமுறைகள் கடந்து வழிகாட்டும் கலங்கரை விளக்கம்.

* தமிழினத்தின் தன்மானக் குரலான நம் கொடியாகவும் கொள்கையாகவும் என்றும் வீற்றிருக்கும் பேரறிஞர் பெருந்தகை அண்ணா.

தமிழகத்தில் மின்வெட்டு இருப்பது உண்மைதான் - திருமாவளவன்

* திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் மக்கள் முகம் சுழிக்கும் வகையில் அவதூறாக பேசுவது தவறு.

* பேருந்துகளுக்கு தவெக கொடி நிறத்தில் வண்ணம் பூசுவது ஏற்புடையதல்ல.

அமைச்சர் செங்கோட்டையனுக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரித்தது சென்னை ஐகோர்ட்

* தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய மனு மீது அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிமுக வேட்பாளர் பிரபு தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

* இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அமைச்சர் செங்கோட்டையன் மனுவை தீர்ப்புக்காக தள்ளிவைத்தார்.

சர்வதேச ஜனநாயக தினம் 2026: அனைத்து குரல்களும் கேட்கும்போது ஜனநாயகம் சிறக்கும்- ஐ.நா முக்கிய அழைப்பு!...

*சர்வதேச ஜனநாயக தின கொண்டாட்டங்களின் பின்னணியில் பல தசாப்தகால சர்வதேச முயற்சிகள் உள்ளன.

*தனிநபர்களின் முடிவெடுக்கும் உரிமைகளைப் பாதுகாத்தல், மனித உரிமைகளுக்கு முன்னுரிமை அளித்தல் மற்றும் சமூகத்தில் அனைத்துத் தரப்பு மக்களின் பங்களிப்பை உறுதி செய்வதை இக்கருப்பொருள் வலியுறுத்துகிறது.

லண்டன் வாழ் தமிழர்களை இன்று மாலை சந்திக்கிறார் முதலமைச்சர் விஜய்

* தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் விஜய் லண்டன் சென்றுள்ளார்.

* நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை அவர் தொடங்கி வைத்தார்.

பெண் Biker மீது கார் மோதிய பரபரப்பு வீடியோ.. கொலை முயற்சி வழக்கில் இளைஞர் கைது

*சக பைக்கர்களுடன் தனது Aprilia RS 457 பைக்கில் சென்றுகொண்டிருந்தார்.

*திட்டமிட்ட கொலை வழக்கு பதிவு செய்த குருகிராம் போலீசார் அவரை தேடி வந்தனர்.

சிறுவர்களை வைத்து போதை வியாபாரம்.. அலமாரிக்குள் ஒளிந்த ஆசாமி - இலவச Wifi மூலம் சிக்கிய சுவாரஸ்யம்

* கோகைன், ஹெராயின் உள்ளிட்டவற்றை அவர் சப்ளை செய்து வந்துள்ளார்.

*அவர் இருக்கும் இடத்தில் இலவச பப்ளிக் WIFI உடன் கனெக்ட் ஆகி இருந்துள்ளது.

கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபுவின் உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை நிர்வாகம் தகவல்!...

*சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரான வி.எஸ்.பாபுவுக்கு கடந்த 9-ம் தேதி அதிகாலை திடீரென கடுமையான மூச்சுத்திணறல் மற்றும் சுவாசக் கோளாறு ஏற்பட்டது.

*அவருக்கு தேவையான சுவாச உதவிகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருவதால், அவர் தீவிர மருத்துவ கண்காணிப்பிலேயே வைக்கப்பட்டுள்ளார்.

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: திமுக, தவெக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

* தவெக வேட்பாளராக களமிறங்கிய விஜய் பெரம்பூர் தொகுதிக்கும் திருச்சி தொகுதிக்கும் கூட புதிதானவர்.

* முதலமைச்சர் விஜய் 2 கட்டமாக பிரசாரம் செய்ய இருக்கிறார்.

இந்தியாவுக்காக விளையாடிய ஹாக்கி வீராங்கனையை ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர் ஆக்கிய திருமணமும் கோர எதார்த்தமும்!

*ஆக்ரா, மத்திய பிரதேசம், ஒரிசா என சுற்றிச் சுழன்ற மாலதி, அதுவே தன் வாழ்வின் "பொன்னான நாட்கள்" என விவரிக்கிறார்.

* எனது எல்லா கனவுகளும் மிக மிக எழுத்தாக நசுக்கப்பட்டு விட்டன. அதை புரிந்துகொள்வதே எனக்கு கடினமாக உள்ளது" என்கிறார் .

தமிழகத்தில் வருகிற 20-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்...

* ஏனைய வட தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

* சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்: இடதுசாரிகளின் வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!...

* இடதுசாரி கட்சிகள் அமைச்சரவையில் பங்கேற்காமல் வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருகின்றன.

* தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் இடதுசாரி கட்சிகள் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தனர்.

இனிமேல் UPI வணிக பணப்பரிவர்த்தனைகளுக்கு கட்டணம்: மத்திய அரசு

* தனி நபர்களுக்கு இடையிலான UPI பணப் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் இல்லை.

* ரெயில்வே, எரிபொருள் உள்ளிட்ட குறிப்பிட்ட பிரிவுகளில் ரூ. 2,000-க்கு மேல் ரூ.5 கட்டணம்.

X

Maalai Malar
www.maalaimalar.com