
சென்னை வரும் ராகுல் காந்தி இன்று முதலமைச்சர் விஜயை சந்திக்கிறார்
* ராகுல்காந்தி கலந்து கொள்ளும் மாணவர்கள் நிகழ்ச்சிக்காக பிரமாண்ட பந்தல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
* தமிழ்நாடு முழுவதும் இருந்து ஏராளமான கல்லூரிகளில் இருந்து மாணவ-மாணவிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி
* துரைமுருகன் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
* துரைமுருகனுக்கு இதயநோய் பிரச்சனை இருப்பதாக சொல்லப்படுகிறது.
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 600 பேர் கைது: ஜந்தர் மந்தரில் உச்சகட்ட பாதுகாப்பு...
* தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக கோரி காக்ரோச் ஜனதா கட்சி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.
* இந்த நிலையில் காவல்துறையின் அனுமதியை மீறி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட 600 பேரை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது.
நியாயமான தேர்தல் நடைபெறும் வரை போராட்டத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை - அபிஜீத் தீப்கே...
* டெல்லியில் நடைபெறவுள்ள போராட்டத்தில் பெருமளவிலான இளைஞர்கள் கலந்துகொள்ள வேண்டும் என அபிஜீத் தீப்கே தெரிவித்திருந்தார்.
* இதையடுத்து டெல்லிக்கு செல்லும் பல ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டு, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு காவல்துறை அதிகாரிகள் குவிக்கப்பட்டுள்ளனர்.
* இந்தியாவில் ஸ்டார்லிங்க் நிறுவனம் இணைய சேவையை தொடங்குவதற்கு தொழிபதிபர் அம்பானி தடுத்து வருவதாக எலான் மஸ்க் குற்றம்சாட்டியுள்ளார்.
* இந்த நிலையில், எவரும் ஒரு நாட்டின் கொள்கையை தீர்மானிக்க கூடாது என நடிகரும் மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
149 ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறை: சாதனை படைத்த ஆஸ்திரேலிய அணி...
*தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்தத் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் அனுபவமிக்க வீரர்களுக்கு மட்டுமே அதிகளவில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
*ஆஸ்திரேலிய டெஸ்ட் வரலாற்றில் 149 ஆண்டுகளில் பிளேயிங் லெவனில் 20 வயதுடைய ஒரு வீரர்கூட இடம்பெறாமல் இருப்பது இதுவே முதல்முறையாகும்.
*தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனது பதியிலிருந்து விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லியில் நடைபெறவுள்ள போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, சென்னை பெசன்ட் நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 30-க்கும் மேற்பட்ட இளைஞர்களை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர்.
தேசிய நெடுஞ்சாலை மைல் கல்லில் இடம்பெற்ற இந்தி எழுத்துக்கள்
*தமிழகத்தில் ஆட்சி மொழியாக தமிழும் தொடர்பு மொழியாக ஆங்கிலமும் என இருமொழி கொள்கை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
*திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மைல் கல்லில் தமிழ், ஆங்கிலத்துடன் சேர்த்து இந்தி எழுத்துக்கள் எழுதப்பட்டு.
GOLD PRICE TODAY: ஏறுமுகத்தில் தங்கம் விலை - இன்றைய நிலவரம்
* தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,880-க்கும் விற்பனையாகிறது.
* வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.
அதிமுக சுயபரிசோதனை செய்ய வேண்டிய தருணம் இது - அன்புமணி
* இடைத்தேர்தல் வெற்றி தவெகவிற்கு கூடுதல் பலம் சேர்க்கும்.
* எல் நினோ தாக்கம் குறித்து முதலமைச்சர் விஜய் உடனடியாக ஆலோசிக்க வேண்டும்.
அமைதியான முறையில் போராடும் இளைஞர்களை தாக்குவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும் - மு.க.ஸ்டாலின்
* எதிர்ப்பை வெளிப்படுத்துவது குற்றமல்ல.
* ஜனநாயகத்தைக் காப்பதற்காக எழும் குரலை ஒடுக்குவது ஜனநாயகத்தையே அழித்துவிடும்.
இடைத்தேர்தலில் தவெகவை பொறுத்தவரை வெற்றியில் தோல்வி - மு.க.ஸ்டாலின்
* கடந்த தேர்தலில் அதிமுக 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்த நிலையில், தற்போது மூன்றாவது இடத்திற்கு சென்றுள்ளது.
* இடைத்தேர்தலில் திமுகவைப் பொறுத்தவரை தோல்வியில் வெற்றி.
கும்மிடிப்பூண்டியில் ரூ.48 லட்சத்தில் குப்பை வாகனங்கள் - அமைச்சர் குமார் திறந்து வைத்தார்!
* கும்மிடிப்பூண்டியில் ரூ.48 லட்சத்தில் 21 ஊராட்சிகளுக்கு 24 மின்கல குப்பை வாகனங்கள் வழங்கல்.
* கீழ்முதலம்பேட்டில் ரூ.35 லட்சத்தில் கட்டப்பட்ட 2 புதிய வகுப்பறைகளை அமைச்சர் குமார் திறந்தார்
பஞ்சாபில் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளா? வைரல் வீடியோவின் உண்மை சம்பவம் அம்பலம்!
* பஞ்சாபில் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள் பிறந்ததாக பரவிய வைரல் வீடியோ முற்றிலும் போலியானது.
* AI புகைப்படங்களை எடிட் செய்து லைக், ஃபாலோயர்களுக்காக என்கேஜ்மென்ட் ஃபார்மிங் செய்யப்பட்டது உறுதியானது.
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ்
* தேர்தல் கடந்த 6-ந் தேதி நடந்து முடிந்து நேற்று ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது.
* புதிய திட்டங்களை அறிவிக்க அரசுக்கு தடை இல்லை.
சென்னை வந்தடைந்தார் ராகுல் காந்தி - காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு
* எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி 'மாணவர்களின் குரல்' என்ற நிகழ்ச்சி வாயிலாக அவர்களிடம் பேசி வருகிறார்.
* மாணவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ராகுல் காந்தி இன்று சென்னை வந்தார்.
Video: "இந்தியாவைப் பற்றி நெகட்டிவ் மட்டும் காட்டாதீங்க!" - மும்பையில் வாழும் ஜப்பானிய பெண்!
* இந்தியா குறித்த எதிர்மறை பிரச்சாரத்திற்கு மும்பை வாழ் ஜப்பானிய பெண் ஹிகாரு-சான் துணிச்சலாக பதிலடி.
* வியூஸ்களுக்காக இந்தியாவின் வறுமை, அசுத்தத்தை மட்டும் அல்காரிதம் புஷ் செய்வதாக குற்றச்சாட்டு வைத்தார்.
டெல்லியில் பரபரப்பு: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் பங்கேற்க முயன்ற பிரபல யூடியூபர் துருவ் ரதீ கைது!...
*டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபெறவிருந்த போராட்டத்தில் கலந்துகொள்ளத் திட்டமிட்டிருந்த பிரபல யூடியூபர் துருவ் ரதீயை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
*துருவ் ரதீ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி போராட்டத்தில் பங்கேற்க முடியாததற்கு இதுதான் காரணம் - சோனம் வாங்சுக்.
அரசின் பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியிலும் நாட்டின் பாதுகாப்புக்காகத் தொடர்ந்து பணியாற்றி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்..
இளைஞர்கள் எந்தச் சூழ்நிலையிலும் அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்..
சர்வாதிகாரத்தால் ஜனநாயகத்தின் குரலை ஒடுக்கிவிட முடியாது - கனிமொழி..
மாற்றுக்கருத்துகளுக்கு இடமில்லை என்றால், பிறகு ஜனநாயகத்தில் எஞ்சியிருப்பதுதான் என்ன?..
அபிஜீத் தீப்கே உட்பட தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்..
பூந்தமல்லி-வடபழனி மெட்ரோ ரெயில் தொடக்க விழா - பிரதமர் மோடி நாளை சென்னை வருகை
* இசை அமைப்பாளர் இளையராஜாவின் இசை பயிற்சி மையத்தையும் தொடங்கி வைக்கிறார்.
* சென்னையில் ஞாயிற்றுக்கிழமை 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.
சந்திப்பு நிறைவு - நீலாங்கரையில் இருந்து ஒரே காரில் புறப்பட்ட முதலமைச்சர் விஜய் - ராகுல் காந்தி
* ராகுல் காந்தி டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று மதியம் சென்னை விமான நிலையம் வந்தார்.
* மாணவர்கள் குரல் நிகழ்ச்சி நடத்திய ராகுல்காந்தி, இன்று சென்னையில் உள்ள தீவுத்திடலில் மாணவர்கள் முன்னிலையில் பேச இருக்கிறார்.
தமிழ்நாட்டில் இருக்கும் பாஜகதான் தவெக - கனிமொழி..
தமிழ்நாட்டில் போராடுபவர்களை தவெக அரசு ஒடுக்குகிறது..
டெல்லியில் இருக்கும் தவெகதான் பாஜக.
ஜனநாயகத்தைக் காப்பவர்கள் சிறைபிடிக்கப்படுகிறார்கள்; தலைவர்கள் கைதிற்கு மு.க ஸ்டாலின் கண்டனம்..
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், 'Z+' பாதுகாப்புடன் சுதந்திரமாக வலம் வருகிறார்.
மக்களுக்குத் துரோகம் இழைத்ததற்குப் பொறுப்பான அனைவரும் அதற்கான விளைவுகளைச் சந்திக்க வேண்டும்..
டெல்லியில் கைதானவர்கள் நாளைக்குள் விடுவிக்கப்பட வேண்டும் இல்லையெனில்...சோனம் எச்சரிக்கை..
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா அறிவிக்கப்படாத அவசரநிலைச் சூழலில் இருக்கும் என்று நான் சற்றும் நினைத்துக்கூடப் பார்த்ததுஇல்லை
அவர்கள் விடுவிக்கப்படாவிட்டால், நான் உண்ணாவிரதப் போராட்டம் அல்லது பாதயாத்திரை மேற்கொள்வது குறித்துப் பரிசீலிக்க வேண்டிய கட்டயாம் ஏற்படும்
ஒருவர் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் பகுத்தறிந்து செயல்படுங்கள்.
இந்தியை திணிப்போம் என மாணவர்களிடையே வெளிப்படையாக சொன்னவர் அமித் ஷா.