
தமிழ்நாடு சட்டப்பேரவை நிதிநிலை கூட்டத்தொடர் அமர்வு தொடங்கியது.
தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவதை உறுதி செய்ய தனித்தீர்மானம் கொண்டு வரப்பட இருக்கிறது.
சட்டசபை முன்னாள் உறுப்பினர் சுப்பிரமணியன் என்சிற கோமுகி மணியனுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.
தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும் என சட்டசபை ஏகமனதாக தீர்மானிக்கிறது.
தமிழ் என்பது ஒரு மொழி மட்டுமல்ல, அது நமது உயிர், உணர்வு - முதலமைச்சர் விஜய்
தாய் எப்படி புனிதமோ, அதை போன்றே தாய் மொழியும்.
தாய் நமக்கு மிகப்பெரிய புனிதம் எனில் நாம் எல்லோரும் போற்றும் தமிழ்த்தாய் பற்றி சொல்லவா வேண்டும்.
தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் பவர்.
இந்தியாவின் நெற்றில் இருக்கும் பொட்டு தான தமிழ் மொழி.
தமிழும், தமிழனும் இல்லாத நாடு ஏது?
தமிழின் பெருமையை சொல்ல திருக்குறள் ஒன்று போதாதா?
தமிழ்த்தாய் வாழ்த்திற்கு முதலிடம் கொடுப்பது தானே மாநில உரிமை.
தமிழ் என்று சொன்னாலே ஒட்டுமொத்த தமிழ்நாடே ஒன்றாக வந்து நிற்கும்.
தமிழ் மொழியின் பெருமைய பாதுகாப்பதில் தவெக அரசு சமரசம் செய்யாது.
1891-ம் ஆண்டு சுந்தரனாரால் இயற்றப்பட்ட மனோன்மணீயம் நாடக நூலின் பாயிரம்.
1970 நவம்பர் 23-ல் அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் என அரசாணை கொண்டுவரப்பட்டது.
2021 டிச.12-ல் தமிழ்நாட்டின் பாடலாக தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரம் அளிக்கப்பட்டது.
பொது நிகழ்ச்சிகளின் தொடக்கத்தின் முதலாக தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடும் வகையில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர்
முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானத்திற்கு திமுக ஆதரவு அளித்தது.
முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது திமுக எம்எல்ஏ கோவி செழியன் உரையாற்றினார்.
தமிழ்த்தாய் வாழ்த்திற்கு 3-ம் இடம் என்று சொல்லும்போது அவமானமாக இருக்கிறது.
தமிழ்மொழியை தேசிய மொழியாக்கி செம்மொழியாக்கியவர் கலைஞர் கருணாநிதி.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அரசு அலுவலகங்களில் பாட அரசாணை வெளியிட்டவர் கலைஞர்.
1981-ல் மதுரையில் 5-வது தமிழ்நாட்டை நடத்தியவர் எம்.ஜி.ஆர்.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது யாருக்கும் எதிரான நடவடிக்கை அல்ல.
தமிழ் என்ற வரும்போது இந்த பேரவை ஒரே குரலில் ஒலிக்க வேண்டும்.
தமிழ்த்தாய் வாழ்த்து என்பது தமிழ்மொழியின் தொன்மை, பண்பாட்டின் அடையாளம்.
தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனம், அரசு நிறுவனங்களில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்படுவது தமிழர்களின் உணர்வு.
தமிழ்த்தாய் வாழ்த்து தனித்தீர்மானத்தின் மீது காங்கிரஸ் எம்எல்ஏவும் அமைச்சருமான விஸ்வநாதன் உரையாற்றினார்.
முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானம் 8.5 கோடி தமிழ் மக்களால் ஏற்கப்பட்டுள்ளது.
மனேன்மணியம் சுந்தரனார் பல்கலையில் தமிழுக்கு ஏற்பட்ட அவமானம்.
முதலமைச்சர் கொண்டு வந்த தனித்தீர்மானத்தின் மீது அமைச்சர் வன்னிஅரசு உரையாற்றினார்.
முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்திற்கு விசிக ஆதரவு.
தமிழ்நாடு, தமிழர் என்ற அரசியல் தான் இன்றும் தொடர்கிறது.
ஒரே நாடு, ஒரே மொழி என்பதற்காக தேசிய இனங்களின் அடையாளங்களை அழிக்க முயற்சி.
தமிழர் அடையாளத்தை உலகுக்கு பறைசாற்றும் தீர்மானம் இது.
தமிழ் தேசியமும் திராவிடமும் வேறு வேறு என பேசும் அபாயகரமான அரசியல்.
தமிழ்த்தாய் வாழ்த்து தனித்தீர்மானத்தின் மீது பாமக எம்எல்ஏ சிவகுமார் உரையாற்றினார்.
பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதலமைச்சர் இருக்க வேண்டும்.
பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்களை தமிழக அரசு நியமிக்க வேண்டும்.
முதலமைச்சர் கொண்டு வந்துள்ள தனித்தீர்மானத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு அளித்தது.
மாநில அரசுகள் பின்பற்றும் தனித்துவ விவகாரங்களில் மத்திய அரசின் தலையீடு இருக்கக்கூடாது.
தனித்தீர்மானத்தின் மீது ஐயூஎம்எல் எம்எல்ஏவும் அமைச்சருமான ஷாஜகான் ஆதரவு அளித்து உரையாற்றினார்.
மொழி உணர்வை சீண்டி பார்க்கும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது.
முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது அமைச்சர் ராஜ்மோகன் உரையாற்றினார்.
மொழியின் பெயரை தங்கள் பிள்ளைகளுக்கு வைத்து அழகு பார்க்கும் கூட்டம் இது.
தமிழ்த்தாய் வாழ்த்து என்பது உலகத்தாய் வாழ்த்து.
இனி பொது நிகழ்ச்சிகள், கல்வி நிலையங்கள், எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டுமே முதலில் ஒலிக்கும் அதற்காக தீர்மானம் நிறைவேற்றியவர் என்ற சரித்திரத்தில் முதல்வரின் பெயரே நிலைக்கும் அவரை வாழ்த்தும் இந்த தீர்மானத்தை வரவேற்கிறேன்.
முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வரவேற்பு
தனித் தீர்மானத்தை மத்திய அரசு ஏற்காது என்பதால் சட்டமாக இயற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ கோரிக்கை.
முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தமிழ்த்தாய் வாழ்த்து தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாட்டின் நிதிநிலை சரியாக இல்லை என விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் உரையாற்றினார்.
நெல், கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம்.
நெல் கொள்முதலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் சன்னரக நெல்லுக்கு ரூ.2,750 வழங்கப்படும்.
பொது நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2.600 வழங்கப்படும்.
கரும்புக்கான ஊக்கத்தொகை ஒரு டன்னுக்கு ரூ.709.50 உயர்த்தி வழங்கப்படும்.
வரலாற்றிலேயே முதல்முறையாக நெல்லுக்கு ஊக்கத்தொகை ரூ.156 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழக பட்ஜெட் மீதான 2-ம் நாள் விவாதம் தொடங்கியது.
திமுக உறுப்பினர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உரையாற்றினார்.
கொள்கையை பேசி பேசி மக்கள் மனதை பிடித்தவர்கள் திராவிட இயக்கத்தினர்.
பட்ஜெட்டில் மாற்றத்தை காணவில்லை. ஏமாற்றம் தான் மிஞ்சியது.
கடந்த 5 ஆண்டுகாலம் தமிழகத்தில் விவசாயிகள் போராட்டம் இன்றி வாழ்ந்தார்கள்.
அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பிஸியாகவே இருக்கிறார் -எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
விவசாயிகள் மீது குண்டாஸ் போட்ட ஆட்சி திமுக ஆட்சி - அமைச்சர் நிர்மல்குமார்
கரும்பு டன்னுக்கு ரூ.4000 கொடுத்தது வரலாற்றில் முதல்முறை. விவசாயிகள் நலனுக்காக வரலாறு படைத்துள்ளார் முதலமைச்சர் விஜய் - செங்கோட்டையன்
கரும்பு டன்னுக்கு ரூ.4,500 கொடுப்போம் என தவெக வாக்குறுதி அளித்தது.
எங்கள் ஆட்சிக்காலத்தில் அமைச்சர்கள் டென்ஷனாகத்தான் இருப்போம். நீங்கள் ரிலா்்ஸாக இருக்கிறீர்கள் - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
வாய்க்கால் தகராறுக்கு கூட சரிசெய்து விட்டீர்களா என இரவு பகல் பாராது போன் செய்கிறார் முதல்வர் விஜய்.
நாங்களும் தினந்தோறும் டென்ஷனாகத்தான் இருக்கிறோம்.
புதிய ஆட்சி அள்ளி தருவார்கள் என எதிர்பார்த்தனர் விவசாயிகள். ஆனால் கிள்ளி தருகிறீர்கள் - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை படிப்படியாகவே திமுக அரசு உயர்த்தியது.
திமுக ஆட்சியில் தேர்தல் அறிக்கையில் சொன்னது போல் நெல்லுக்கு ரூ.2500, கரும்பிற்கு ரூ.3500 உயர்த்தி தரவில்லை.
நெல், கரும்பிற்கான ஊக்கத்தொகை தொடர்பாக தவெக - திமுக காரசார விவாதம் நடைபெற்றது.
எவ்வளவு கடன் தள்ளுபடி செய்ய முடியும் என்பது தெரிந்து தான் வாக்குறுதி அளிக்க வேண்டும்.
திமுக இடைக்கால பட்ஜெட்டில் கரும்புக்கு ரூ.4000 கொடுப்போம் என கூறி இருந்தோம்.
திமுக ஆட்சியில் ரூ.19,500 கோடி கடன் தள்ளுபடி செய்தோம்.
விவசாயிகள் வாங்கிய ரூ.21,000 கோடி கடனை தவெக அரசு முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.
விவசாயக்கடன் முழு தள்ளுபடி என நாங்கள் சொல்லவில்லை. நீங்கள் தான் சொன்னீர்கள்.
ரூ.21,000 கோடி கடனை தள்ளுபடி செய்கிறோம் எனக்கூறிவிட்டு வெறும் ரூ.6,000 கோடி மட்டுமே தள்ளுபடி செய்துள்ளீர்கள்.
தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி 1.30 கோடி பெண்களுக் திமுக அரசு உரிமைத்தொகை கொடுத்தது.
நான் முதல்வன் திட்டத்தால் ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆக அதிகம் பேர் பயிற்சி பெறுகின்றனர்.
திமுக ஆட்சியில் திடீர் திடீரென மழை பெய்தது. தவெக ஆட்சியில் மழையே பெய்யவில்லை.
திமுக ஆட்சியின் 5 ஆண்டு காலத்தில் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்தார்கள்.
பாமகவின் நிழல் பட்ஜெட்டில் இருந்து கருத்துக்களை பெற்றோம் - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
திரைக்கதையை தயார் செய்கிறார் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.
கிடங்குகள் வேண்டும் என பல ஆண்டுகளாக விவசாயிகள் போராடி வருகின்றனர் - அமைச்சர் ரமேஷ்
திமுக ஆட்சியில் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்ததாக சிறந்த திரைக்கடை எழுதி உள்ளார் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.
ரூ.309 கோடிக்கு நெல் சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும் என்ற திமுக வாக்குறுதி என்னாச்சு?
நெல்லுக்கும் கரும்புக்கும் அரசு ஒரு விலை நிர்ணயித்தால் அதிகாரிகள் ஒரு விலை நிர்ணயித்தார்களே அது தெரியாதா?
திமுக ஆட்சியில் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்தார்களா? துன்பப்பட்டார்களா? என்பது அவர்களுக்கே நன்றாக தெரியும்.
மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்வதற்காக கரும்பு தோட்டத்தில் கான்கிரீட் போடப்பட்டதை சுட்டிக்காட்டி அமைச்சர் ரமேஷ் பேசினார்.
திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட நெல் சேமிப்பு கிடங்குகள் உள்ளிட்டவற்றை பட்டியலிட்டு முன்னாள் அமைச்சர் சக்கரபாணி பதில் அளித்தார்.
நெல் கிடங்குகள் கட்டவில்லை என அமைச்சர் ரமேஷ் தவறாக கூறினார். திமுக ஆட்சியில் 18 மாவட்டங்களில் 50-க்கும் மேற்பட்ட சேமிப்பு கிடங்குகள் கட்டப்பட்டன.
தவெகவினர் படத்தை பார்த்து வந்தவர்கள், திமுகவினர் முரசொலி படித்து வந்தவர்கள். வேளாண்மை துறைக்கு திமுக ஆட்சியை விட குறைவாக ஒதுக்கி உள்ளது தவெக.
திமுக ஆட்சியில் ஆக்டிங் கிடையாது. ஆக்ஷன் மட்டுமே இருந்தது தவெக எப்படி ஆட்சிக்கு வந்தது என்பது அமைச்சர் பேசும்போது டெக்னிக் தெரிகிறது.
அந்த டெக்னிக்கை 10 நிமிடங்கள் முன்பு தான் அண்ணன் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திடம் கற்றுக்கொண்டதாக அமைச்சர் ரமேஷ் பதில் அளித்தார்.
விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை நிறுத்த போகிறதா அரசு? நுண்ணீர் பாசனத்திட்டம், மும்முனை மின்சாரம் திட்டத்திற்கு கடந்த ஆட்சியை விட குறைவான நிதி ஒதுக்கீடு ஏன்?
வேளாண் துறைக்கு திமுக ஆட்சியை விட ரூ.279 கோடி குறைத்து நிதி ஒதுக்கி உள்ளது தவெக அரசு.
திமுக ஆட்சியில் வேளாண் துறைக்கான செலவை விட கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் குறித்து மானிய கோரிக்கையில் அறிவிப்பு - நிர்மல்குமார்
நுண்ணீர் பாசனத்திட்டம், மும்முனை மின்சாரத்திற்கு திமுக ஆட்சியைவிட கூடுதலாக ரூ.8 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்
வேளாண் பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்களுக்கு பெயர் மாற்றம் நடந்துள்ளது. திமுக 2 லட்சம் மின் இணைப்பு கொடுத்தது விவசாயிகளுக்கு மிகப்பெரும் வரப்பிரசாதமாக அமைந்தது. இலவச மின்சாரம் தொடர்பாக அறிவிப்பு பட்ஜெட்டில் இல்லை. தவெக ஆட்சியில் மின்சாரமே வரமேட்டேங்குது.
நெல் கொள்முதலுக்கு விவசாயிகளிடம் திமுக ஆட்சியில் கையூட்டு பெறப்பட்டது. திமுக ஆட்சியில் ரேஷனில் தரப்பட்ட அரிசியை பயன்படுத்த முடியவில்லை என மக்களே கூறினர்.
ரேஷன் அரிசி தொடர்பாக புகார் வரும் நிலையில் அதனை சரிசெய்ய தொடர் நடவடிக்கை எடுக்கிறோம்.
திமுக ஆட்சியில் தரமான அரிசிகள் வழங்கப்பட்டது. ஆட்சியர் தலைமையிலான குழு தான் நெல்கொள்முதல் நிலையங்களை திறக்க அனுமதி அளித்தது - சக்கரபாணி
நீங்கள் 5 வருடங்கள் ஆட்சியில் இருந்தீர்கள், நாங்கள் ஆட்சிக்கு வந்து 3 மாதங்கள் தான் ஆகிறது.
5 வருடங்கள் ஆட்சியில் இருந்த திமுக 3 மாதத்தில் மட்டுமே ஆட்சியில் உள்ள தவெகவுடன் ஒப்பீடு செய்வது நியாயமா?
200 தொகுதிகளில் வெல்வோம் என அடிக்கடி சொன்ன திமுக, விவசாயக்கடன் தள்ளுபடி பற்றி தேர்தல் அறிக்கையில் பேசவே இல்லை.
பிரசாரத்தின்போது விவசாயியாக பிறக்க வேண்டும் என 3 முறை சொன்னார் முதல்வர் விஜய். அதை அடிக்கடி குறிப்பிடுகிறீர்கள்.
சொன்னால் செய்பவர் முதல்வர். நெல்லுக்கான ஊக்கத்தொகை உயர்த்தி உள்ளார் முதலமைச்சர் விஜய்.
பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட விவசா சங்கங்களுடன் பேச்சு நடத்திய நிலையில் கரும்பு ஊக்கத்தொகை அறிவித்தார் முதல்வர் - அமைச்சர் ஆதவ் அர்ஜூனா
திமுக ஆட்சியில் இதுவரை ரேஷன் கடைகளில் அரிசி வாங்கி அதை நாம் சமைத்து சாப்பிட்டோமா?
இலவசமாக தரும் அரிசி சாப்பிட முடியாத நிலையில் உள்ளதால் தான் சன்னரக நெல்லுக்கான ஊக்கத்தொகை உயர்வு.
திமுகவிற்கு பயிர் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற எண்ணமே கிடையாது.
கடந்த 5 ஆண்டுகளில் கரும்பு சாகுபடியின் பரப்பளவு குறைந்துள்ளது.
கரும்பு உற்பத்தி கடந்த 5 வருடத்தில் 70% குறைக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச விலையின்றி தவித்ததால் தவெக அரசு நடவடிக்கை.
விவசாயிகளுக்கான பொற்கால ஆட்சியாக இந்த 5 ஆண்டு கால ஆட்சியை முதல்வர் விஜய் மாற்றுவார் என அமைச்சர் ஆதவ் திட்டவட்டம்.
திறந்த வெளியில் உள்ள 10 லட்சம் நெல் மூட்டைகளை அப்புறப்படுத்த வேண்டும். வறட்சி நிவாரண நிதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
ரேஷன் கடைகளில் தரமான அரிசி கொடுத்தால் மீண்டும் ஆட்சியை பிடித்து விடலாம் என எம்ஜிஆர் கூறினார்.
ரேஷன் கடைகளில் தரப்படும் அரிசியை வைத்து ஆட்சியை மதிப்பிடலாம் என எம்ஜிஆர் கூறினார் - சபாநாயகர்
தவெக அரசு தாக்கல் செய்த பட்ஜெட் பழைய கள்ளு. புதிய மொந்தை.
திமுக அரசின் பட்ஜெட்டை தான் தவெக அரசு அப்படியே வாசிக்கிறது என கிராமத்தில் பேசுகிறார்கள் - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
நமது மண்ணில் விளையும் கரும்புக்கு சர்க்கரைத்தன்மை குறைவு - முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு
தவெக ஆட்சியில் தமிழ்நாடு மின்னல் வேகத்தில் முன்னேறுகிறது. சட்டமன்ற தேர்தலில் சைதாப்பேட்டையில் மாசுவை நீக்கி தூய்மை கிடைத்துள்ளது.
கரும்புக்கு என கூட்டுறவு சங்கத்தை உருவாக்கியது மராட்டிய மாநிலம். விரைவில் கரும்பு உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணிக்கு வரும் - அமைச்சர் ஆதவ்
நன்னிலம் அதிமுக எம்எல்ஏ காமராஜ் பட்ஜெட் மீதான விவாதத்தில் உரையாற்றினார்.
அதிமுக ஆட்சிக்காலத்தில் விலைவாசி, கடன் கட்டுக்குள் இருந்தன.
தவெகவின் முதல் பட்ஜெட் என்பதால் எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது.
தவெகவின் வாக்குறுதிகள் பட்ஜெட்டில் அறிவிப்பாக வரவில்லை.
பட்ஜெட் தாக்கல் என்ற பெயரில் வெற்றி என்ற பெயரை ஒவ்வொரு திட்டத்திற்கு சூட்டும் விழா தான் நடைபெற்றது.
தவெக அரசின் முதல் பட்ஜெட் மீது மக்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் எந்த புதிய திட்டமும் இல்லை.
மகளிருக்கு ரூ.2,500 உரிமைத்தொகை, ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர், உதவித்தொகை போன்ற அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றம்.
நிதி நிலையை சரி செய்ய 2 ஆண்டு தேவை என தவெக அரசு சொல்கிறது. ஆனால் 50 ஆண்டு தேவை என நிதித்துறை செயலாளர் கூறுகிறார்.
தேர்தல் அறிக்கையில் கூறிய 125 அறிவிப்புகள் தவெக அரசின் முதல் பட்ஜெட்டிலேயே அறிவித்துள்ளோம். துறை ரீதியான மாற்றங்களை முதலமைச்சர் விஜய் கொண்டு வந்துள்ளார். கடனை நாங்கள் குறைத்துக்கொண்டே தான் வருகிறோமே தவிர அதிகரிக்கவில்லை.
திமுக அரசு முதல் காலாண்டில் வாங்கிய கடனை விட குறைவாகவே தவெக ஆட்சியில் ரூ.29,881 கோடி கடன்.
முதல் காலாண்டில் கடன் வாங்கும் தொகையை தவெக அரசு சற்று குறைத்துள்ளது. மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் கடன் அளவை 0.54-ல் இருந்து 0.51 ஆக குறைத்துள்ளோம்.
கடனை நாங்கள் குறைத்துக்கொண்டே தான் வருகிறோமே தவிர அதிகரிக்கவில்லை.
அதிமுக எம்எல்ஏ காமராஜ் கூறுகையில்,
தமிழக அரசின் பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு முக்கியத்துவமில்லை. விவசாயம் என்பது வெறும் தொழில் அல்ல, விவசாயிகளின் வாழ்க்கை முறை. மேட்டூர் அணை திறக்கப்படாததால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்திடம் உரிய நீரை கேட்கிறோம், உபரி நீரை அல்ல. தண்ணீர் இல்லை என கூறி 2 நாட்கிில் அணை நிரம்பி விட்டதாக கூறுகின்றனர்.
முதலமைச்சர் கர்நாடகா செல்ல நினைத்தது தவறானது. உபரி நீரை மட்டும் திறந்து விட தமிழகம் கர்நாடகாவின் வடிகாலா?
மேகதாது விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என காமராஜ் வேண்டுகோள் விடுத்தார்.
பட்ஜெட் மீதான விவாதத்தில் அமமுக எம்எல்ஏ காமராஜ் உரையாற்றினார்.
தவெக அரசின் முதல் பட்ஜெட் நல்ல தொடக்கம். வருவாயை பெருக்க அலுவாலியா தலைமையில் குழுவுக்கு வரவேற்பு
தமிழ்நாடு மீண்டும் மின்மிகை மாநிலமாக மாறும். விவசாயிகள் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யுங்கள். மேலும் ரூ.8,000 கோடி மட்டுமே விவசாய கடன் உள்ளது. ரூ.8000 கோடி கடனை தவெக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளுக்காக கடன் வாங்கியாவது திட்டங்களை நிறைவேற்றுங்கள்.
நீங்கள் இருக்கும் வரை நீங்கள் தான் முதலமைச்சர். பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத ஆட்சி மத்தியில் அமைக்க வேண்டும்.
காங்கிரஸ் அல்லாத ஆட்சி என கூறிய காமராஜூக்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
காவிரி நீர் விவகாரத்தில் தமிழக உரிமையை மீட்க தவெக அரசுக்கு காங்கிரஸ் உறுதுணையாக இருக்கும்.
65 ஆண்டுகளுக்குப்பின் காங்கிரசுக்கு ஆட்சியில் பங்கு கிடைத்துள்ளது. நிச்சயம் உறுதுணையாக இருந்து செயல்படுவோம்.
தமிழ்நாடு பட்ஜெட் மீதான விவாதத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ பிரவீன் உரையாற்றினார்.
மனிதர் - வனவிலங்கு மோதலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீலகிரியில் இருந்த புல்லட் ராஜா யானை தற்போது குமரியில் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் பாதிப்பு.
யானை புல்லட் ராஜா குமரிக்கு வந்ததில் இருந்து பொதுமக்கள் மீது அதிகளவில் தாக்குதல்.
யானைகள் 3000 கி.மீ. நடந்து செல்லும், அது செல்லும் பாதை காடுகளை வளப்படுத்தும் - அமைச்சர் ரஞ்சித்
யானை தாக்கி உயிரிழந்த பழங்குடியின நபருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது. மனித - விலங்கு மோதலை தடுக்க ஏஐ தொழில்நுட்பம்.
விளவங்கோடு தொகுதி மக்களின் பிரச்சனை தீர்க்கப்படும் - அமைச்சர் ஆனந்த்
தமிழக முதலமைச்சரும், கேரள முதலமைச்சரும் பேசி நெய்யாறு பிரச்சனையை தீர்க்க வேண்டும் - பிரவீன்
நெய்யாறு பிரச்சனை குறித்து முதலமைச்சருடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ஆனந்த்
பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.44,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு அனைவரும் வரவேற்பு - மணப்பாறை எம்எல்ஏ கதிரவன்
மணப்பாறை முறுக்கு பிரபலம் என்றாலும் கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் மணப்பாறை மக்களுக்கு அல்வாவே அதிகம் கிடைத்தது.
திமுக ஆட்சியில் மணப்பாறை மக்களுக்கு எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை.
திமுக அல்வா கொடுத்ததாக பேசிய தவெகவினருக்கு கே.என்.நேரு பதில் அளித்தார்.
திருச்சியின் பெரிய தொகுதியான மணப்பாறைக்கு கூட்டுக்குடிநீர் திட்டம், தலைமை மருத்துவமனை திமுக ஆட்சியில் கிடைத்தவை.
புதிய கல்லூரி திறப்பு, கிராமங்களுக்கு புதிய சாலை, சிப்காட்டில் வேலை ஏற்படுத்தியது திமுக ஆட்சியில் தான்.
புதிதாக வந்த தம்பி... முதல்வர் விஜயிடம் கேட்டு இன்னும் நிறைய செய்யுங்கள். அல்வா என்றெல்லாம் சொல்லாதீர்கள்.
சிப்காட்டிற்கான அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலை உள்ளது. பெருந்துறை சிப்காட்டில் எந்த விதமான பெரிய மாற்றங்களையும் நான் பார்க்கவில்லை.
நேரு சொன்னதை போல் எவ்வித மாற்றத்தையும் திருச்சி சிப்காட்டில் நான் பார்க்கவில்லை.
திருச்சி சிப்காட் நன்றாக நடைபெறுவதாக நேரு கூறினார். நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம்.
சட்டசபை உறுப்பினர்கள் கொடுக்கப்பட்ட நேரத்தில் மட்டும் பேசினால் இப்படி நேரம் இழுக்காது. உறுப்பினர்கள் தங்கள் புகார்களை ஆதாரத்துடன் வைத்தால் சரியான நேரத்தில் பேசி, அதற்கு பதிலும் சரியாக கிடைக்கும் - சபாநாயகர்
பட்ஜெட் மீதான விவாதத்தில் சட்டசபை உறுப்பினர் தமிமுன் அன்சாரி உரையாற்றினார்.
சட்டசபை விவாதங்களால் அழகுப்படுத்த வேண்டும்.
விவாதங்களின் முடிவில் வெற்றி பெறுவது மக்களின் கோரிக்கைகளாக இருக்க வேண்டும்.
சட்டசபை நிகழ்வுகள் நேரடியாக உடனுக்குடன் ஒளிபரப்பப்படுவதால் உறுப்பினர்கள் நேர்த்தியாக பேச வேண்டும்.
முன்பு பேரவையில் நடந்தது மறுநாள் காலை செய்தி தாளில் வரும். ஆனால் தற்போது நேரலையில் மக்கள் பார்க்கின்றனர்.
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியினர் விவாதத்தில் ஈடுபட்டாலும் வெல்வது மக்களாக இருக்க வேண்டும்.
புதிய சட்டமன்றத்தை கட்டுவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும்.
திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள் பயங்கரவாதிகளா?
நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்களை ஒடுக்கியது நியாயமா?
சிஏஏ சட்டத்தில் ஈழ தமிழர்களுக்கு குடியுரிமை கொடுக்க வலியுறுத்த வேண்டும்.
ஈழ தமிழர்கள் தாங்கள் விரும்பும் நாடுகளுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும்.
காவிரி விவகாரத்தில் மாற்று நடவடிக்கை குறித்து ஏன் பேச கூடாது.
நீட் தேர்வு வேண்டாம் என்பது தான் தவெக அரசின் நிலைப்பாடு. அப்படியிருக்கும்போது திக பரப்புரைக்கு அனுமதி மறுத்தது ஏன்?
புதிய முஸ்லீம்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் சான்று கிடைக்கும் வகையில் சட்டம் இயற்ற நடவடிக்கை தேவை.
ஈழத்தமிழர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்க வேண்டும் - தமிமுன் அன்சாரி கோரிக்கை
காமராஜர் திட்டமிட்ட ராசிமணல் அணை கட்டும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
ராசிமணலில் அணை கட்டும் திட்டத்தை செயல்படுத்த முயற்சிக்க வேண்டும். ராசிமணலில் அணை கட்டினால் இரு மாநிலத்துக்கு பிரச்சனை ஏற்படாது - தமிமுன் அன்சாரி
கடலில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த ஆய்வு நடைபெற்று வருகிறது. ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தவெக அரசு தடை விதிக்க வேண்டும் - தமிமுன் அன்சாரி
தேவைப்பட்டால் சட்டசபை மாலை நேரத்திலும் நடத்த முடிவு - சபாநாயகர்
இடைவெளி இல்லாமல் சட்டசபை நடப்பதால் உறுப்பினர்களுக்கு உடல்சோர்வு ஏற்பட்டுள்ளது. உடல் சோர்வால் உறுப்பினர்கள் பாதி பேர் வெளியே சென்று விட்டார்கள் - தமிமுன் அன்சாரி
பட்ஜெட் மீதான விவாதத்தில் பாஜக உறுப்பினர் போஜராஜன் உரையாற்றினார்.
பேரவைக்கு முதல்வர் வேஷ்டி சட்டையுடன் வருவது பொங்கல், தீபாவளியை போல் ஒரு மகிழ்ச்சி வருகிறது.
தமிழ்த்தாய் வாழ்த்து தீர்மானம் நிறைவேற்றி இன்றும் முதல்வர் உள்ளிட்ட அனைவரும் வேட்டி, சட்டையில் வந்திருக்கலாம்.
பயிர்க்கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் - பாஜக எம்எல்ஏ
தமிழுக்காக தன் வாழ்நாளையே அர்ப்பணித்த பாரதியார் கோட் சூட் அணிந்து தான் வாழ்ந்தார். தமிழ் எங்கள் உயிர் என்பது எங்களது சொல்லில் அல்ல செயலில் இருக்கும், முதல்வர் அத்தகையவர் - அமைச்சர் ராஜ்மோகன்
கடையநல்லூர் எம்எல்ஏ ராஜேந்திரன் உரையாற்றினார்.
மதிமுகவை சேர்ந்த ராஜேந்திரன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டவர். நான் சார்ந்திருக்கும் திமுக சார்பில் நன்றி. மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு நன்றி.
வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்ய கூடாது என முடிவெடுத்தவன் நான்.
கைது செய்யப்பட்ட நாளை தனது நாளாக்கியவர் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி.
கொரோனா பாதித்த நோயாளிகளை நேரில் பார்த்த ஒரே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - ராஜேந்திரன்
பால் உற்பத்தியில் தமிழ்நாடு முன்னிலையில் இருக்க காரணம் திமுக, 90 நாட்களில் தவெக எப்படி கொண்டுவர முடியும்.
விவசாயிகளுக்கு எவ்வளவு இலவச மின் இணைப்புகள் என்ற அறிவிப்பு பட்ஜெட்டில் இல்லை - ராஜேந்திரன்
கடந்த திமுக ஆட்சியில் நீர்வளத்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? - அமைச்சர் ஆதவ் அர்ஜூனா
நிதி அமைச்சரின் நிதி நிலை அறிக்கை மிக தெளிவாக இருந்தது - அமைச்சர் ஆதவ் அர்ஜூனா
தமிழில் நன்றாக பேச அமைச்சர் ராஜ்மோகனிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என ராஜேந்திரன் கூறியதால் அமைச்சர் மரிய வில்சன் ஆவேசமடைந்தார்.
தனது தமிழ் குறித்து திமுக எம்எல்ஏ பேசியதால் ஆத்திரடைந்த நிதியமைச்சர்,"சாதி ரீதியாக கேலி செய்வது அதிகரித்துள்ளது, தற்போது மொழி ரீதியாக கேலி செய்வதும் அதிகரித்துவிட்டது. என்னால் இப்படிதான் பேச முடியும், வேண்டும் என்றால் ஏற்று கொள்ளுங்கள் யாருக்காகவும் மாற்றிக்கொள்ள மாட்டேன்உங்களுக்காக என் ஸ்டைலை மாற்ற முடியாது" என பதில் அளித்தார்.
நிதியமைச்சர் வரும் காலத்தில் பிழையின்றி தமிழில் பட்ஜெட் வாசிக்க வேண்டும் என்று ராஜேந்திரன் கூறியதற்கு அமைச்சர் ராஜ்மோகன் கூறுகையில்,"எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சங்கத்தமிழிலா பேசுகிறார்?" என்றார்.
அமெரிக்காவில் இருந்து வந்த பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தபோதும் இந்த நிலைதான் இருந்தது- அமைச்சர் ஆதவ் அர்ஜூனா.
அந்தந்த மாவட்ட பழக்க வழக்கத்திற்கு ஏற்றார்போல் தமிழ் மொழி பேசும் விதம் மாறும்- திமுக எம்எல்ஏ எ.வ.வேலு
சட்டமன்றத்தின் அலுவல் மொழி தமிழோ, ஆங்கிலத்திலோ.. இரு மொழியிலும் பேசலாம் என விதி உள்ளது. தனக்கு எதிரே இருந்தவர் தெலுங்கில் பேசியபோது அனுமதித்து தெலுங்கிலேயே பதில் தந்தவர் ஜெயலலிதா- சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்
சட்டமன்ற விவாதத்தில் நிதியமைச்சர் இவ்வளவு கோபப்படக்கூடாது என முன்னாள் அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் அவர்,"நிதியமைச்சர் சட்டமன்றத்தில் பேசுவதை பர்சனலாக எடுத்துக்கொள்கிறார். கடையநல்லூர் எம்எல்ஏ தமிழ் மீதுள்ள ஆர்வத்தால் அப்படிக்கூறினார், அவர் அவைக்கு புதியவர்" என விளக்கம் அளித்தார்.
மேட்டூர் அணை திறப்பு எப்போது? விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்வீர்களா? மாட்டீர்களா? என எம்எல்ஏ ராமச்சந்திரன் கேள்வி எழுப்பினார்.
* தமிழ்நாட்டிலே தமிழ்த்தாய் வாழ்த்து முதலிலே பாடப்பட வேண்டும் என்கின்ற சட்டபூர்வ அங்கீகாரத்தை அரசு பெற்று தந்தால்தான் அது நிலைத்து நிற்க முடியும்.
* ஒன்றிய அரசு என்று சொல்லவே அவர்கள் பயப்படுகிறார்கள். எனவே ஒன்றிய அரசு என்று உச்சரிக்கவே பயப்படுகிற இந்த அரசு சட்டம் கொண்டு வருமா என்பது சந்தேகம்.
MBBS, BDS தரவரிசைப் பட்டியல் வெளியீடு: 2026-27 மருத்துவப் படிப்புகளுக்கு 72,633 பேர் விண்ணப்பம்!...
*மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை விண்ணப்ப விவரங்கள், அரசு ஒதுக்கீட்டு இடங்கள், 7.5 சதவீத அரசு பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டன.
*இதில் 26,956 விண்ணப்பங்கள் தகுதியானவை என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இவர்களில் 9,105 மாணவர்களும், 17,851 மாணவிகளும் உள்ளனர்.
ரஷியா மீது சரமாரி டிரோன் தாக்குதல் நடத்திய உக்ரைன்: 13 பொதுமக்கள் உயிரிழப்பு- பலர் காயம்
* உக்ரைனில் எல்லையில் இருந்து சுமார் 1000 கி.மீ. தொலைவில் உள்ள தொழில் நகரமான நிஸ்னேகாம்ஸ்க்கில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை குறிவைத்து தாக்குதல்.
* உக்ரைன் மீதும் ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளது. கார்கீவ் பிராந்தியத்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ள கிராமத்தில் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
* ஜார்க்கண்ட்டில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
* சட்டசபை நோக்கி பேரணி சென்றபோது மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது.
M.Ed. மாணவர்கள் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு நாளை தொடக்கம்
* தரவரிசைப் பட்டியல் 25.08.2026 அன்று வெளியிடப்படும்.
* மாணாக்கர் சேர்க்கை 27.08.2026 முதல் 31.08.2026 வரை நடைபெறும்.